Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2020 15:41:00 Hours

சிங்கப்பூரில் நடைபெற்ற 8ஆவது மாநாட்டில் இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள் பங்கேற்பு

அந்த வகையில் 25நாடுகளை உள்ளடக்கிய 100ற்கும் மேற்பட்ட பிராந்தியங்களைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் இராணுவ உயரதிகாரிகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஆராச்சி நிபுணர்கள் அரச சார்பற்ற நிபுணர்கள் போன்றோரின் ஒருங்கிணைப்போடு சிங்கப்பூரில் 8ஆவதாக இடம் பெறும் சங்கிரில்-லா டயலொக் சேர்ஃபா கருத்தரங்கு எனும் தலைப்பிலான மூன்று நாள் (20-22 ஜனவரி); மாநாடானது பிராந்தியங்களின் பாதுகாப்பு மற்றும் நிரந்தரத் தன்மை போன்றவற்றை உள்ளடக்கி இடம் பெற்றது.

அந்த வகையில் இலங்கையை முன்னிலைப்படுத்தி பதில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அத்துடன் கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரால் பியல் டி சில்வா போன்றோர் இம் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இதன் போதான சிறப்புரையானது சிங்கப்பூர் பிராந்திய பாதுகாப்பின் மூத்த அமைச்சரான திரு ஹெங் சீ அவர்கள் நாடுகளானது எவ்வாறு பலதரப்பு செய்பாடு அனுகுமுறைகள் மற்றும் அவற்றை செயற்படுத்தும் முறைகள் தொடர்பான கலந்துரையாடல் தலைப்புகளை விபரித்தார்.

அந்த வகையில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சிங்கப்பூர் பிராந்திய பாதுகாப்பின் மூத்த அமைச்சரான திரு ஹெங் சீ அவர்கள் சங்கிரில்-லா டயலொக் சேர்ஃபா கருத்தரங்கின் பிரதி பணிப்பாளர் உயர் இராணுவ அதிகாரிகள் நியூசிலாந்து அவுஸ்திரேலிய ரசிய பாகிஸ்தான் மற்றும் மலேசிய போன்ற நாடுகளின் உயர் அதிகாரிகள் போன்றோரை உள்ளடக்கி மிக முக்கியமான மாநாடாக சிங்கப்பூரில் இடம் இக் கருத்தரங்கு இடம் பெற்றது.

அந்த வகையில் இவ் வருடாந்த 8ஆவது புலடன் மாநாடானது உலகலாவிய ரீதியில் காணப்படும் பிராந்தியங்களைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் இராணுவ உயரதிகாரிகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஆராச்சி நிபுணர்கள் அரச சார்பற்ற நிபுணர்கள் போன்றோரின் ஒருங்கிணைப்போடு கிட்டத் தட்ட 75 பிரதிநிதிகளின் பங்களிப்போடு புதன் கிழமை (22) ஆரம்பமாகியது.

மேலும் 2019ஆம் ஆண்டில் சங்கிரில்-லா டயலொக் சேர்ஃபா கருத்தரங்கு எனும் தலைப்பிலான இக் கருத்தரங்கானது நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளும் முறைகள் எவ்வாறு நாடுகளை போர் சூழலில் பாதுகாத்தல் அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு உத்திகளுக்கான பிராந்திய முன்னேற்றங்கள் கடலோர பாதுகாப்பு தொடர்பாக எதிர்கொள்ளும் சவால்கள் அத்துடன் பொதுத் தரைப் பிரதேசத்தில் எதிர் கொள்ளும் பாதுகாப்பு சவால்கள்.

அந்த வகையில் இம் மாநாட்டில் நான்கு பிரிவுகளாக காணப்படும் பாதுகாப்பு முறைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் முறையிலான சவால்கள் ஏவுகணைப் பெருக்கம் மற்றும் ஆசியாவில் ஐஎன்எப் அச்சுருத்தல் தொடர்பான ஏவுகணை பாதுகாப்பு கடல் சார் வளங்களைப் பாதுகாத்தல் புதிய தொழில்நுட்ட போர்முறை கொள்கை பாதிப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு அபிவிருத்தி முறைகள் மற்றும் அவை தொடர்பான விரிவான விளக்கங்கள் உள்ளடகங்கிய கலந்துரையாடல். திரு பீட்டர் டெஷ், துணை செயலாளர், மூலோபாய கொள்கை மற்றும் புலனாய்வு, பாதுகாப்புத் துறை ( அவுஸ்திரேலிய) திரு செலினா ஹக், கூடுதல் செயலாளர் (நிர்வாகம்), பாதுகாப்பு அமைச்சகம் (பங்களாதேஷ்),பிரிகேடியர் ஜெனரல் (யு) டத்தோ செரி பஹ்லாவன் முகமது ஷெரீப் பின் டத்தோ படுகா ஹாஜி இப்ராஹிம், கூட்டுப் படைத் தளபதி, ராயல் புருனே ஆயுதப்படைகள் (புருனே), தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் (கம்போடியா) கொள்கை மற்றும் வெளியுறவுத் துறை துணை இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் நெம் சோவத்தே,மேஜர் ஜெனரல் சி குவேய், தலைமை, சர்வதேச இராணுவ ஒத்துழைப்பு அலுவலகம், மத்திய ராணுவ ஆணையம் (சீனா),ரியர் அட்மிரல் ஜூர்கன் எஹ்லே, மூத்த இராணுவ ஆலோசகர், சி.எஸ்.டி.பி மற்றும் நெருக்கடி மறுமொழிக்கான நிர்வாக இயக்குநரகம், ஐரோப்பிய வெளிப்புற நடவடிக்கை சேவை, ஐரோப்பிய ஒன்றியம் (ஐரோப்பிய ஒன்றியம்) டாக்டர் நிக்கோலா ரெகாட், இந்தோ-பசிபிக் சிறப்பு பிரதிநிதி, சர்வதேச உறவுகள் மற்றும் வியூகங்களுக்கான இயக்குநரகம், ஆயுதப்படை அமைச்சகம் (பிரான்ஸ்), திரு செபாஸ்டியன் க்ரோத், இயக்குநர், கொள்கை திட்டமிடல், மத்திய வெளியுறவு அலுவலகம் (ஜெர்மனி),வைஸ் அட்மிரல் ஜோனாஸ் ஹக்ரென், ஸ்வீடனின் துணைத் தலைவர் (ஐ.ஐ.எஸ்.எஸ் விருந்தினர்கள்), நஸ்லி ஜாஃப்ரி ஷாயின், பாதுகாப்புத் துறை இணை பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு அமைச்சகம் (இந்தியா),முதல் அட்மிரல் தீதிக் குர்னியன், சர்வதேச ஒத்துழைப்புத் தலைவர், சர்வதேச ஒத்துழைப்பு மையம், இந்தோனேசிய ஆயுதப்படைகள் (இந்தோனேசியா),ஏர் வைஸ் மார்ஷல் டிம் இன்னெஸ், தளபதி, தலைமையகம் ஒருங்கிணைந்த பகுதி பாதுகாப்பு அமைப்பு, ஐந்து சக்தி பாதுகாப்பு ஏற்பாடுகள், இர்வின் ரெஜினோல்ட் பாக்கி ஆர்ம்ஸ்பி இயக்குநர், கொள்கை, பசிபிக் தீவுகள் மன்ற செயலகம் (சர்வதேச நிறுவனங்கள்),திரு சுசுகி ஹீடியோ, சர்வதேச விவகாரங்கள், பாதுகாப்பு கொள்கை பணியகம், பாதுகாப்பு அமைச்சகம், ரியர் அட்மிரல் ஃபுகுடா தட்சூயா துணை இயக்குநர் ஜெனரல், பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் கொள்கை துறை (55), கூட்டு ஊழியர்கள், ஜப்பான் சுய பாதுகாப்பு படைகள் (ஜப்பான்) , திரு லீ வோன்-இக் இயக்குநர் ஜெனரல், சர்வதேச கொள்கை பணியகம், தேசிய பாதுகாப்பு அமைச்சகம் (கொரியா குடியரசு), செனட்டர் லீவ் சின் டோங், பாதுகாப்பு துணை அமைச்சர், வைஸ் அட்மிரல் டத்தோ 'கணேஷ் நவரத்னம், மலேசிய ஆயுதப்படைகளின் (மலேசியா) தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் மையத்தின் (என்.சி.டி.எஸ்) தலைவர், மைக் யார்ட்லி, பாதுகாப்பு துணை செயலாளர் (நியூசிலாந்து), லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது சிராக் ஹைதர் இயக்குநர் ஜெனரல், கூட்டுப் பணியாளர்கள், பாகிஸ்தான் ராணுவம் (பாகிஸ்தான்), லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) கார்டோசோ மணலோ லூனா தேசிய பாதுகாப்பு துணை செயலாளர் (பிலிப்பைன்ஸ்), மேஜர் ஜெனரல் எவ்ஜெனி இல்யின், முதல் துணைத் தலைவர், சர்வதேச இராணுவ ஒத்துழைப்பின் முதன்மை இயக்குநரகம், ரஷ்ய கூட்டமைப்பின் (ரஷ்யா) பாதுகாப்பு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சின் துணைச் செயலாளர் (கொள்கை) திரு தியோ எங் திஹ், பிரிகேடியர் ஜெனரல் டான் சீ வீ, தலைமைத் தளபதி - கூட்டுப் பணியாளர்கள் / சாஃப் இன்ஸ்பெக்டர் ஜெனரல்,பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு கொள்கை அலுவலக இயக்குநர் கர்னல் அமோஸ் யியோ, சர்வதேச விவகாரங்கள், பாதுகாப்பு அமைச்சின் இயக்குநர் கீத் ரோட்ரிக்ஸ்,பிரிகேடியர் ஜெனரல் யூ சீ லியுங், குழுத் தலைவர், கொள்கை மற்றும் வியூகம், பாதுகாப்பு அமைச்சகம் (சிங்கப்பூர்),லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்புத் தளபதி மற்றும் தளபதி, இலங்கை ராணுவம் மற்றும் வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, தளபதி, இலங்கை கடற்படை (இலங்கை),பிரிகேடியர் ஜெனரல் மார்கஸ் மோடர், இயக்குனர், சர்வதேச உறவுகள், சுவிஸ் ஆயுதப்படைகள் (சுவிட்சர்லாந்து),அட்மிரல் சோம்பிரசோங் நில்சமாய், துணை நிரந்தர பாதுகாப்பு செயலாளர், அட்மிரல் பச்சாரா பம்பிச்செட், பாதுகாப்பு படைகளின் துணைத் தலைவர் (தாய்லாந்து),மார்ட்டின்ஹோ மியா கோன்கால்வ்ஸ் இயக்குநர் ஜெனரல், பாதுகாப்பு கொள்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு, பாதுகாப்பு அமைச்சகம் (திமோர்-லெஸ்டே),மேஜர் ஜெனரல் ஸ்டீபன் மக்மஹோன் பாதுகாப்புப் பணியாளர்கள், இராணுவ வியூகம் மற்றும் பாதுகாப்பு ஈடுபாட்டின் உதவித் தலைவர், பாதுகாப்பு அமைச்சின் (இங்கிலாந்து),திரு டேவிட் ஹெல்வி, இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களின் செயல் உதவி செயலாளர், அமெரிக்க பாதுகாப்புத் துறை,மேஜர் ஜெனரல் ஸ்டீபன் ஸ்க்லெங்கா, இயக்குநர், மூலோபாய திட்டமிடல் மற்றும் கொள்கை, அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளை (யுஎஸ்) மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சின் (வியட்நாம்) பாதுகாப்பு மூலோபாய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நுயென் வான் தான், முக்கிய பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் சங்கிரில்-லா டயலொக் சேர்ஃபா எனும் இம் மாநாடானது 2002ஆம் ஆண்டு முதல் உலகலாவிய ரீதியில் பரவலாக காணப்படும் பாதுகாப்பு மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் போன்ற பல உயர் பிரதிநிதிகளை உள்ளடக்கி அனைத்து சமூகத்தினரிடையே பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அனைவரதும் ஓர் ஒன்றிணைப்போடு இடம் பெறுகின்ற மாநாடாக இது காணப்படுகின்றது. இம் மாநாட்டில் அரச பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டனர். மேலும் இக் கருத்தரங்கானது சட்ட மன்ற உறுப்பினர்கள் கல்வி வல்லுனர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் போன்றோரின் பங்கேற்றலுடனும் இடம் பெறுகின்றது.Nike air jordan Sneakers | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ