Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2019 11:34:28 Hours

சமிக்ஞைப் படையணியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாராச்சி பதவியேற்பு

இலங்கை சமிக்ஞைப் படையணியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த எம் ஹெட்டியாராச்சி அவர்கள் தமது கடமைப்பொறுப்பை பனாகொடையில் உள்ள சமிக்ஞைப் படையணியில் ஏற்றதுடன் இவர் சமிக்ஞைப் படையணியின் 9ஆவது படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவ் அதிகாரியவர்கள் இப் படையணியின் முன்னைய அதிகாரியான மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்கள் தமது 34வருட கால இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெறுதலை முன்னிட்டு இப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் இராணுவ விதிமுறைகளுக்கமைவாத புதிய சமிக்ஞைப் படையணி தளபதியவர்கள் வரவேற்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு போன்றன இதன் போது வழங்கப்பட்டது. மேலும் உயிர் நீத்த படையினருக்கான மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

சில நிமிடங்களின் பின்னர் 5ஆவது சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் பி எச் என் சந்திரசேகர அவர்களின் தலைமையிலான படையினரால் புதிய தளபதிக்கான வரவேற்பு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு மேஜர் ஜெனரல் நிலந்த எம் ஹெட்டியாராச்சி அவர்கள தமது புதிய காரியாலயத்தில் மங்கள விளக்கேற்றலுடன் மற்றம் பௌத்த மத வழிபாட்டுடன் தமது கடமைப் பொறுப்பை ஏற்றார். இதன் போது படையினருடனான தேநீர் விருந்துபசார நிகழ்வும் இடம் பெற்றது.

மேலும் மேஜர் ஜெனரல் நிலந்த எம் ஹெட்டியாராச்சி அவர்கள் 25ஆம் திகதி பெப்ரவரி 1965ஆம் ஆண்டு பிறந்ததுடன் தமது முதற்கட்ட கல்வியை கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் மேற்கொண்டார். அத்துடன் இவர் 21ஆம் திகதி ஜூன் மாதம் 1985ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்ததுடன் முதற்கட்ட பயிற்சியை தியத்தலாவை இராணுவ பயிற்சித் தலைமையகத்தில் பெற்றதுடன் அதிகாரிகளுக்கான பயிற்சியை பாகிஸ்தான் இராணுவ பயிற்சி கல்லூரியில் பெற்றார். அதன் பின்னர் தமது இரண்டாவது லெப்டினன்ட் பதவியை 25ஆம் திகதி ஜனவரி மாதம் 1986ஆம் ஆண்டு பெற்றதுடன் இலங்கை சமிக்ஞைப் படையணியில் இணைக்கப்பட்டார். மேலும் இவர் இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையணியில் பிரதான சமிக்ஞைப் படையணி அதிகாரியாக முப்பத்து மூன்று வருடங்கள் சேவையாற்றியதுடன் அதன் போது பலவாறான பதவிகளையும் வகித்துள்ளார். மேலும் நாட்டின் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அல்லாத காலப்பகுதியிலும் தகுந்த உபதேசங்களை வழங்கி சேவையாற்றியுள்ளார். jordan release date | Air Jordan Release Dates 2020