Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th November 2022 18:08:04 Hours

சந்தஹிருசேயவில் பிரமாண்ட 'கட்டின சீவர' பூஜை

முப்படை , பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்களின் வீரத்தை நினைவுகூரும் வகையில் அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சந்தஹிரு சேயவில் வியாழக்கிழமை (3) மாலை முதலாவது 'கட்டின சீவர' பூஜை நிகழ்வு இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா , இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரஞ்சன் லமாஹேவகே, பாதுகாப்பு அமைச்சு செயலாளர், மற்றும் முப்படை தளபதிகளின் பாரியார்கள், தளபதி, வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி -, 21, 54 மற்றும் 56 வது படைப்பிரிவுகளின் தளபதிகள், வடமத்திய முன்னோக்கு பாதுகாப்பு பகுதியின் தளபதி, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், முப்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், பக்தர்களுடன் இணைந்து 'தான' நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

'ஜய ஸ்ரீ மஹா போதியா'வில் இருந்து ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன 'கட்டின சீவர'வை ஏந்தியவாறு 'ஜெனரல் சவேந்திர சில்வா, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே' ஆகியோருடன் வண்ணமயமான ஊர்வலத்தில் 'சந்தஹிரு சேய'விற்குச் சென்றதுடன் நிகழ்வுகள் ஆரம்பமானன. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'பெரஹெரவில்', பல்வேறு மேளக்காரர்கள், நடனக் கலைஞர்கள், கொடி ஏந்தியவர்கள் மற்றும் இராணுவ கலாசாரக் குழுவினர்கள் கலந்து கொண்டிருந்தனர். மதவச்சிய கிடலேகம ஸ்ரீ தலதா விகாரையின் விகாராதிபதி வண. (கலாநிதி) ராஜகீய பண்டித வத்தேவேவ சுமன தேரருக்கு பாரம்பரிய தாம்பூலம் வழங்கப்பட்டதுடன், அன்றைய வழிபாடுகள் ஆரம்பமாகின.

வெள்ளிக்கிழமை (4), புத்தர் காலத்திலிருந்து தொடரும் இந்த சடங்கைச் செய்யும் துறவிகளுக்கு 'கட்டின சீவர' வழங்குவதுடன், சமய சடங்குகளின் முக்கிய நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

இந்த சந்தர்ப்பத்தில், அன்னதானம் வழங்கும் நிகழ்விற்கு முன்னர் காயமடைந்த மற்றும் உயிர்நீத்த அனைத்து போர்வீரர்களுக்கு, முத்தி பிராத்தனையும் காயமடைந்த, நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் ஆசீர்வதிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை (4) நண்பகல் மகா சங்கத்தினருக்கு பகல் அன்னதானம் வழங்குதலுடன் 'கட்டின சீவர நிறைவு பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்களின் ஆதரவுடன் இராணுவத்தினரால் சந்தஹிருசேயவில் முதலாவது 'கட்டின பூஜை' ஏற்பாடு செய்யப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் நீத்த அனைத்து போர்வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 'சந்தஹிரு சேய' திறந்து வைக்கப்பட்டு, மகா சங்க உறுப்பினர்களினால் பாதுகாப்பில் சம்பிரதாயமாக புனிதம் பேணப்படுகிறது