Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd January 2022 22:48:24 Hours

கோட்டை சாமகிரி தர்ம மகா சங்க சபையினால் அதிமேதகு ஜனாதிபதிக்கு 'ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண' விருது

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் அதியுயர் சங்க சபையினால் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு 'ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண' என்ற கௌரவப் பட்டம் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் (2) வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ரஜமஹா விகாரையில் இடம்பெற்றது. கோட்ட ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர், வண இட்டப்பனே ஸ்ரீ தம்மாலங்கார நாயக்க தேரர், அனு நாயக்க தேரர், சிரேஷ்ட பிக்குகள், முதல் பெண்மணி, கௌரவ பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள், பிரதம ஜனாதிபதி ஆலோசகர், ஆளுநர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்ஆகியோர் முன்னிலையில் சம்பிரதாய மரபுகளுடன் இடம் பெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க 'உபோஷித்தகராய வை சென்றடைந்த அதிமேதகு ஜனாதிபதி, முதலில் புத்தருக்கு மலர் வழிப்பாடு செய்ததுடன், மகாநாயக்க தேரருக்கு வணக்கம் செலுத்தினார், இதன் பின்னர் சங்க சபையானது அன்றைய தினம் ஒன்றுகூடுவதற்கான நோக்கத்தையும் அதற்கான காரணங்களையும் முன்வைத்து இந்த வைபவம் ஆரம்பமானதுடன் இந்த வரலாற்றுப் புனிதமான இடத்தில் புத்தாண்டு உதயமான ஒரு நாளுக்குப் பிறகு, அதிமேதகு ஜனாதிபதிக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது. மேலும் , கோட்டையில் உள்ள அதியுயர் சங்கப் பேரவை உறுப்பினர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட கெளரவப் பட்டத்தை வழங்குவதற்கான மேற்கோள், கௌரவம் அடங்கிய பத்திரம் முறைப்படி அதிமேதகு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னர் வாசிக்கப்பட்டது.

இந்தச் நிகழ்வினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் புகழ்பெற்ற 'ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண' விருதை அவருக்கு வழங்கி கௌரவித்த உச்ச சங்க சபையின் தீர்மானத்தை நன்றியுடன் அங்கீகரித்ததுடன் அவர் எப்போதும் அவர்களின் ஆலோசணைகளை ஏற்பதாகவும் உறுதியளித்தார். மகா சங்கத்தினரின் ஆலோசனையின் மூலம், 'புத்த சாசனத்தின்' பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் இதன் போது கொடுக்கப்பட்டது.