Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th May 2020 12:36:31 Hours

கொவிட் நிலைமை தொடர்பாக நிபுணர்களுடன் மேலும் ஒரு கலந்துரையாடல்

ராஜகிரியவில் உள்ள கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க அவர்களின் பங்குபற்றலுடன் ஜனாதிபதிசெயலணி உறுப்பினர்கள் (27) ஆம் திகதி பிற்பகல் நாட்டில் COVID-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக கூடி கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களை முதலில் வரவேற்று இச்சந்திப்பின் நோக்கத்தையும் தற்போதைய நிலைமை தொடர்பாக விளக்கமளித்தார். மேலும் பி.சி.ஆர் சோதனைகள், வெளிநாட்டினரின் வருகை, பொதுமக்களின் நல்வாழ்வு, போக்குவரத்து முறைமைகள், சமூக இடைவெளி பேணல் சுகாதார அறிவுறுத்தல்கள் பின்பற்றல் என்பனதொடர்பாக கருத்து பரிமாற்றப்பட்டது.

மேலும் இந்த சந்திப்பில் முடக்கங்களையும் கட்டுப்பாடுகளையும் தளர்த்தி இயல்பு வாழ்கையை ஏற்படுத்தல் பொருளாதாரத்தை கட்டியெழுப்பல் சுற்றுலாப் பயணத்துறையை ஈர்ப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு பி..சி.ஆர் பரிசோதனைகள் நடத்துதல், வெளிநாட்டிலிருந்து வருகை தருவோர் மற்றும் மேற்கொள்ளப்படும் பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் முன்னேற்றம், தனிமைப்படுத்தல் நடைமுறைகள், தனிமைப்படுத்தல் மையங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மேலதிக தனிமைப்படுத்தல் மையங்களை ஏற்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. Running sport media | Air Jordan Release Dates 2020