Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th May 2019 20:25:24 Hours

கைக்குண்டுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்பு

கூட்டுப்படைத் தலைமையகத்தின் பணிப்புரைக்கமைய இராணுவம் மற்றும் பொலிஸார் ஒன்றினைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது கைக்குண்டுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டன.

வெள்ளிக் கிழமையான 24 ஆம் திகதி பதுரெலிய திகனபுர முன்பள்ளி வளாகத்தினுள் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய 13 கைக்குண்டுகள் மற்றும் 17 அடி நீள ப்லெக்‌ஷிபில் வயர்கள் பொலிஸார் மற்றும் இராணுவ குண்டு செயலிழப்பு பிரிவினால் மீட்கப்பட்டன.

ஹம்புடான, முல்லேரியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 10 கையடக்க தொலைபேசிகள், ஒரு வாள், 5 வெற்று தோட்டா கவர்கள், ஒரு பாதுகாப்பு டோச்லைட் மற்றும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும் திஹாரிய பிரதேசத்தில் 23 ஆம் திகதி நடாத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது 6 இராணுவ சீருடைகள், 88 வரை படங்கள், 2 சவூதி அரேபியர்களது அடையாள அட்டைகள், 106 கம்பட் டீசட்டுகள் மற்றும் கம்பட் துணிகள், 2 தேசிய தவ்ஹீட் ஜமாத்(என்டிஜே) புத்தகங்கள், ஒரு ஐஎஸ்ஐஎஸ் இராணுவ திட்ட அறிக்கைகள், 4 கையடக்க தொலைபேசிகள், 5 வீடியோக்கள், ஒரு எயார் ரயிபல், ஒரு பெடன், ஒரு தொலைநோக்கி, சந்தேகத்திடமான புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன.

புத்தளம் நெடுங்குளம் பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது 347 வெற்று சொட்கன் தோட்டாக்கள், 2 வாள்கள், 4 நஞ்சாக்கூ, ஒரு சொட்கன் தோட்டா கைப்பற்றப்பட்டன. அளுத்கம தர்ஹா நகரத்தில் இம் மாதம் (23) ஆம் திகதி இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது போலி அடையாள அட்டைகள் , கடவுச்சீட்டுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொடிகாவத்த, வெள்ளவத்தை போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 5000 எயார் ரயிபல் தோட்டாக்கள், 2 எயார் ரயிபல்ஸ், ஒரு ட்ரோனா கெமரா, உரிமையாளரற்ற மோட்டார் சைக்கிள் , போலியான தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டன.

குனுப்பிடிய பிரதேசத்தில் இம் மாதம் (22) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 6 மடிக்கனனிகள், 7 பக்கட் கெரொயின், ஒரு வாள், 4 குவைட் அடையாள அட்டைகள், ஒரு குவைட் சீருடை, வெளிநாட்டு சிம் காட்டுகள், கசட்டுகள், ஒரு தொலை நோக்கு மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கைப்பற்றப்பற்றன.

மேலும் மீதொட்டமுள்ள, பொறலஸ்கமுவ, மஹோடகொலன்னாவ, தொட்டவத்த, நாகவில்லுவ பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 4 வாள்கள், 4 சந்தேகத்திற்கிடமான 4 மோட்டார் சைக்கிள்கள், என்டிஜே வீடியோ காட்சிகள் கொண்ட வீடியோ, ஓடியோ, சீடி தட்டுகள் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் போது 63 சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரனைகளுக்காக பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். Sportswear Design | Gifts for Runners