Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th September 2020 14:23:50 Hours

குணமடைந்த 11 நபர்கள் வைத்தியசாலகைளை விட்டு வெளியேறல்-நொப்கோ தெரிவிப்பு

இன்று காலை (24)ஆம் திகதி அறிக்கையின் படி,வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 11 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த (02) பேர் வெளிசர தனிமைபடுத்தல் மையத்திலும், ஐக்கி அரபு இராஜ்நியத்தில் இருந்து வருகை தந்து ஹோட்டல் சங்ரில்லா- ஹம்பாந்தோட்டை தனிமைபடுத்தல் மையம், பியகம் விலேஜ் தனிமைப்படுத்தல் மையம்,மற்றும் தியகம தனிமைப்படுத்தல் மையம் ஆகிய மையங்களில்(07) பேர், எதியோப்பியாவில் இருந்து வந்து ஹோட்டல் டொல்பின் தனிமைப்படுத்தல் மையத்தில்(01) நபர், ரஷ்யாவில் இருந்து வருகை தந்து அமாலோ போட்டிக் ரிசோட்- மாத்தரை தனிமைப்படுத்தல் மையத்தில் (01) நபர் உள்ளிட்ட நபர்கள் குறித்த தனிமைப்படுத்தல் மைங்களில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (24) காலை 6.00 மணி வரை கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆகும்.

அபுதாபியில் இருந்து EY 264 விமான மூலம் 6 பயணிகளும், தேகாவில் இருந்து QR 668 விமானம் மூலம் 63 பயணிகளும் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து UL 226 விமான மூலம் 287 பயணிகளும் இலங்கை வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படையிரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (24) பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு 205 நபர்கள் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்களில் நிபுனபூஸ்ஸ தனிமைபடுத்தல் மையத்தில் 3 பேர், மிஹிந்தலை தனிமைபடுத்தல் மையத்தில் 18,கல்பிட்டிய ருவல தனிமைபடுத்தல் மையத்தில் 1, ஹோட்டல் ஜெட்வின் சீ தனிமைபடுத்தல் மையத்தில் 2 பேர் ,ஹோட்டல்டொல்பின் தனிமைபடுத்தல் மையத்தில் 32பேர், ஹோட்டல் அமாரியா தனிமைபடுத்தல் மையத்தில் 26 பேர், இன்டுருவ தனிமைபடுத்தல் மையத்தில் 81 பேர், டிக்வெல தனிமைபடுத்தல் மையத்தில் 11பேர், தியத்தலாவை தனிமைபடுத்தல் மையத்தில் 20பேர் மற்றும் பல்லேகல தனிமைபடுத்தல் மையத்தில் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

அதேபோல், இன்று 24 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் , 44115 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களை விட்டு வெளியேறியுள்ளனர். அத்துடன் தற்போது முப்படையினரால் நிர்வகித்துபட்டு வரும் 68 தனிமைப்படுத்தல் மையங்களில் 6927 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (23 ) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1600 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 273708 ஆகும்.

இதற்கிடையில், குணமடைந்த 11 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (24) அதிகாலை வைத்தியசாலைகளை விட்டு வெளியேறயுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த தனிமைப்படுத்தப்பட்ட தந்தவர்களாவர்.

இன்று (24 ) காலை 6.00 மணியளவில், கந்தகாடு போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தலில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை 646 ஆகும் ,அவர்களில் தொற்று நோய்க்கு உள்ளான 04 பேர் தற்பொழுதும் சிகிச்சையில் உள்ளனர்.

வெ ளிநாட்டில் இருந்து வந்தவர்களைத் தவிர சமூகத்தில் வேறு ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அனைத்து இலங்கையர்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி தங்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து அதன் பரவலைத் தடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (நிறைவு) Running sneakers | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta