Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2020 16:52:39 Hours

கிளிநொச்சியில் வெள்ள நிவாரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்

பேரழிவு அனர்த்தத்தினை குறைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுடனான இரண்டாவது பட்டறையானது, கிளிநொச்சியில் உள்ள 571 ஆவது பிரிகேட் படைப்பிரிவு தலைமையகத்தில் திங்கற்கிழமை 23 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த பட்டறையானது 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.

வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பார்க்கப்படும் வெள்ள அனர்த்த நிலைமைக்கான தயார் நிலை முன்னேற்றம் தொடர்பாக இந்த பட்டறையில் பரிசீலிக்கப்பட்டதுடன், 57 ஆவது படைப் பிரிவின் தளபதிகளுடன் பேரழிவு தணிப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, அனைத்து பிரிகேட் படைப்பிரிவு தளபதிகள், கேணல் பொது பதவி நிலை அதிகாரி, அனைத்து சிவில் விவகார அதிகாரிகள் மற்றும் அனைத்து பட்டாலியன் தளபதிகளும் அமர்வுகளில் பங்கேற்றனர். சிளிநொச்சி பேரிடர் மேலாண்மை மையத்தின் உதவி பணிப்பாளர் திரு எம்.கோகுலராஜா மற்றும் கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள தலைமை பொறியாளர் திரு எஸ்.குமாரன் ஆகியோர் குறித்த நிகழ்விற்கு தங்களது பங்களிப்பை வழங்கினர். Authentic Sneakers | Air Jordan Release Dates Calendar