Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2021 14:45:16 Hours

கவச வாகனங்களுக்கான கள துப்பாக்கிச் சூட்டின் 2வது கட்டம் தொடர்கிறது

கவச வாகனங்களின் (AFV) களத் துப்பாக்கிச் சூடு பயிற்சியின் இரண்டாம் கட்டம் (கட்டம் 11) 2021 ஒக்டோபர் 7-8 தேதிகளில் கற்பிட்டிய இலங்கை விமானப்படை கள துப்பாக்கிச் சூட்டு தளத்தில் நடைப்பெற்றது.

இது இலங்கை இராணுவ கவச படையணியின் படைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் கவசப் வாகன பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸின் மேற்பார்வையில் இடம்பெற்றது. 2015 முதல் 2019 வரை பாடநெறியினை தொடர்ந்த 16 அதிகாரிகள் மற்றும் 134 சிப்பாய்கள் இந்த அமர்வுகளில் பங்கேற்றனர்.

இளம் அதிகாரிகளின் பாடநெறி, நிபுணத்துவ AFV துப்பாக்கி கையாளுதல் பாடநெறி மற்றும் அடிப்படை துப்பாக்கி கையாளுதல் பாடநெறி ஆகியவற்றைப் பின்பற்றிய சிப்பாய்கள் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 2 x BMP MK II, 2 x BTR 80A மற்றும் 2 x WMZ 551A AFVகள் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டன.

படைத் தளபதி மற்றும் பயிற்சி பாடசாலையின் தளபதி ஆகியோர் நிகழ்வுகளில் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.