Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd August 2020 23:56:29 Hours

கதிர்காம திருவிழாவை முன்னிட்டு ஆலய சுற்றுப்புற மின் விளக்குகள் இராணுவ தளபதி அவர்களினால் திறந்து வைப்பு

இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற தேவாலயமான கதிர்கா பெருமானின் திருவிழாவை முன்னிட்டு கதிர்காம வளாகம் மற்றும் சுற்றுப்புறம் அமைந்துள்ள மின் விளக்குகள் பஸ்நாயக நிலமே திரு தில்ருவன் ராஜபக்‌ஷ அவர்களது அழைப்பையேற்று கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இம் மாதம் (1) ஆம் திகதி மாலை இந்த மின் விளக்குகளின் மின்னாலிகளை அழுத்தி திறந்து வைக்கப்பட்டு பின்பு திருவிழாஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதற்கு முன்பு இராணுவ தளபதி அவர்கள் ‘கிரி வெஹெர தேவாலயத்திற்கு சென்று பாதுகாப்பு படையினருக்கு ஆசிர்வாதம் ஏற்படும் வகையில் சிறப்பு பூஜைகளிலும் கலந்து கொண்டார். பின்பு இந்த தேவாலயத்தின் நிர்வா தலைவரான திரு சோமபால ரத்னாயக அவர்களை சந்தித்து அவர்களுடன் உறையாடல்களை மேற்கொண்டார். பின்னர் இராணுவ தளபதி அவர்கள் பஸ்நாயக நிலம்பே அவர்களுடன் இணைந்து சென்று கதிர்காம பெருமானின் ஆசிர்வாத பூஜைகளில் இணைந்து கொண்டு பின்னர் திருவிழாவில் நடனங்களை புரிவதற்கு வருகை தந்த நடன குழுவினர்களுடன் உறையாடலையும் மேற்கொண்டார்.

புனித ஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதில் இராணுவத்தின் பங்கேற்பை குறித்து இராணுவ தளபதி அவர்களினால் பஸ்நாய க நிலம்பே அவர்களுக்கு இராணுவத்தின் சார்பான நிதியுதவியாக நன்கொடை வழங்கி வைக்கப்பட்டன. அச்சந்தர்ப்பத்தில் நிலமே அவர்களினால் கொரோனா தொற்று நோய்க்கு எதிராக இராணுவத்தின் அர்ப்பணிப்பு சேவையை பாராட்டியும் இராணுவ தளபதிக்கு நன்றிகளை தெரிவித்தார்.

அத்துடன் இராணுவ தளபதி அவர்கள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ்ள்ள 12 ஆவது படைப் பிரிவுத் தலைமையகம், 3 படைத் தலைமையகங்கள், படையணிகளைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு மத்தியில் உறையாடலையும் மேற்கொண்டு இவர்கள் இந்த திருவிழாவின் நிமித்தம் வழங்கிய ஒத்துழைப்பு நிமித்தம் இவர்களுக்கு உலருணவு பொருட்கள் இராணுவ தளபதி அவர்களின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இராணுவ தளபதியவர்கள் இந்த திருவிழாவை சுமூகமான முறையில் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாதுகாப்பு படையினர் பொலிஸாருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்தார்கள்.

இவ்வருட கதிர்காம திருவிழாவானது கொரோனா தொற்றுநோய் நிமித்தம் குறைந்தளவு பக்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. இந்த திருவிழாவில் (பெரஹெர) குறைந்த எண்ணிகையான யானைகளுடன் சிறு எண்ணிக்கை கொண்ட நடன குழுவினருடன் இந்த பெரஹரவை ஆரம்பிப்பதற்காக இராணுவ தளபதி அவர்களை பஸ்நாய நிலம்மே அவர்கள் அழைத்து சென்று பின்னர் இராணுவ தளபதி அவர்களினால் இந்த நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்ஷன், மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா, 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன, 122 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் லங்கா அமரபால மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Sport media | UK Trainer News & Releases