Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th September 2020 15:21:20 Hours

'உலக சுற்றுலா தின' மாநாட்டில் இராணுவ தளபதியின் உரை

ஐ.நா உலக சுற்றுலா நிறுவனம் மற்றும் உலக சுற்றுலா தினத்தினை இலங்கையில் உத்தியோகபூர்வமாக கொண்டாடுவதன் ஒரு கட்டமாக, இன்று (27) ஆம் திகதி காலை கண்டி சிட்டி சென்டரில் 7 ஆவது சர்வதேச சுற்றுலா தலைவர்களின் உச்சி மாநாடு மற்றும் சுற்றுலா ஆராய்ச்சி மாநாடானது இடம்பெற்றது. இந்நிகழ்வில் வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறை, மத்திய மாகாண மூலோபாய கூட்டு மற்றும் சுற்றுலா மற்றும் விமான அமைச்சு இணைந்து கொண்டன. இந்நிகழ்வின் சிறப்பு உரையானது பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட்-19 எதரிபார பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் சுற்றுலா ஆய்வுத் திட்டங்களின் மாணவர்கள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கல்வியாளர்கள் மற்றும் ஆசியாவின் ஆராய்ச்சியாளர்கள் சங்கம் (தெரா) மற்றும் சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை முன்னாள் மாணவர்கள் சங்கம் (AATEHM), ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த அமர்வு "பின்னடைவு, பொறுப்பு மற்றும் நிலையான இலங்கை சுற்றுலாவை நோக்கி" எனும் தொனிப்பொருளில் காலை 11.00 மணிக்கு தொடங்கப்பட்டது. இவ்வமர்வுகளில் இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி ஹனா சிங்கர், இலங்கைக்கான ஐ.நா. உலக சுகாதார அமைப்பு (WHO) பிரதிநிதிகள் டொக்டர் ரசியா பெண்ட்சே ,இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான ஐ.எல்.ஓ நாட்டு பணிப்பாளர் திருமதி சிம்ரின் சிங் மற்றும் இலங்கை சுற்றுலாத் துறையின் தலைவர் திருமதி கிமாலி பெர்னாண்டோ உரையாற்றினால் உரைநிகழ்த்தப்பட்டன.

இலங்கையில் நிலையான சுற்றுலா வளர்ச்சியை வலுப்படுத்த மிகவும் தேவையான கொள்கை நடவடிக்கைகள் மற்றும் மூலோபாய மேலாண்மை பயன்பாடுகளை வழங்குவதற்கான அறிவு அடிப்படையிலான மன்றத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த அறிவுசார் மற்றும் தொழில்முறை உரையாடல், 'சுற்றுலா மற்றும் ஊரக வளர்ச்சி' குறித்த ஐ.நா உலக சுற்றுலா நிறுவனத்தின் கருப்பொருளுடன் ஆரம்பிக்கப்பட்டது. வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறை, மத்திய மாகாண மூலோபாய கூட்டு மற்றும் சுற்றுலா மற்றும் விமான அமைச்சு, இலங்கை சுற்றுலாத் துறையின் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து உலக சுற்றுலா தினத்தை (செப்டம்பர் 27) கண்டியில் கொண்டாடின.

ஐ.நா உலக சுற்றுலா நிறுவனமானது இலங்கையில் உள்ள சுற்றுலா அமைச்சின் ஒத்துழைப்புடன் பொருளாதார வளர்ச்சி, மற்றும் சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை உள்ளடங்களாக பொறுப்பான, நிலையான மற்றும் உலகளவில் அணுகக்கூடிய சுற்றுலாவாக மேம்படுத்துவதுடன், மேலும் உலகளவில் அறிவு மற்றும் சுற்றுலா கொள்கைகளை முன்னெடுப்பதில் தனது தலைமைத்துவத்தையும் ஆதரவையும் வழங்குகிறது உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு செய்தியில், ஐ.நா உலக சுற்றுலா நிறுவனமானது கொவிட் -19 தொற்றுநோய் சுற்றுலாத்துறையின் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு வாய்ப்பாக காணப்படுகின்றது மற்றும் அதன் சமூக, கலாச்சாரத்தின் மூலம் , அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பின் ஊடான நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு எவ்வாறு பங்களிக்கிறது, இந்த நேரத்தில் தொற்றுநோயைத் தாண்டி, மக்களை ஒன்றிணைத்து, ஒற்றுமையையும் நம்பிக்கையையும் ஊக்குவிப்பதன் மூலம், உலகளாவிய ஒத்துழைப்பை முன்னேற்றுவதில் முக்கியமான கூறுகள் இந்த நேரத்தில் அவசரமாக தேவைப்படுகின்றன” என்பது தொடர்பாக குறிப்பிட்டது. Sport media | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify