Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th August 2022 11:20:52 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின், இராணுவ பரா தடகளம் மற்றும் புதியவர்கள் ஒருங்கிணைந்து நடாத்தும் விளையாட்டுப் போட்டி

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தடகள சாம்பியன்ஷிப் - 2022, 23 வது இராணுவ பரா தடகள சாம்பியன்ஷிப் மற்றும் படையணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் வண்ணமயமான பரிசளிப்பு விழா இன்று (4) தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்து கொண்டார்.

நூற்றுக்கணக்கான இராணுவ விளையாட்டு வீரர்/வீராங்கனைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இராணுவத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட இப்போட்டியானது இந்த ஆண்டின் ஒருங்கிணைந்த மெகா போட்டியாகும். மேலும் இன்றைய இறுதிப் போட்டிகளுக்கு முன்னதாக, அந்தந்த படையணியின் மட்டங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக இப்போட்டிகள் நடைபெற்றன. கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பிற காரணங்களால் தடைப்பட்டிருந்த போட்டியில் இராணுவ பரா தடகளக் குழு மற்றும், ஸ்கை டைவிங் கமிட்டி என்பன சில வருடங்களுக்கு பிறகு இப்போட்டியில் இணைந்து கொண்டதுடன், இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும் இராணுவ தடகளக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாபா அவர்கள் மேற்பார்வையில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது

இராணுவத் தொண்டர் படையணி தடகள சாம்பியன்ஷிப் - 2022 இல் , தொண்டர் படையணியின் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் மொத்தம் 775 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிய போட்டி முழுவதும் தங்கள் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தினர். அனைத்து இராணுவத் தொண்டர் படையணியின் விளையாட்டு வீரர்களும் 50 தடகள மற்றும் களப் பிரிவுகளில் படையணிகளுக்கிடையிலான ஆண்கள் மற்றும் பெண்கள்) பங்கேற்பாளர்களாகப் போட்டியிட்டனர். அதேபோல், மே 2009 க்கு முன்னர் போரின் போது காயமடைந்தவர்கள் உட்பட, பல்வேறு குறைபாடுகள் கொண்ட 230 வீரமிக்க வீரர்கள், 23 வது இராணுவ பரா தடகள சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டனர். புத்துணர்ச்சியாளராகக் கருதப்படும் மொத்தம் 597 தடகள வீரர்கள் ஜூலை இறுதி வாரத்தில் ஆரம்பமான படையணிகளுக்கிடையிலான புதியவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் தங்கள் தடகளத் திறனை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.

மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாபா அவர்கள் மூன்று சம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்குபற்றிய பிரதிநிதிகள் குழுவுடன் அன்றைய பிரதம அதிதியான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வரவேற்று இறுதிப் போட்டிகளைக் காண பிரதான மேடைக்கு அழைத்துச் சென்றார்.

இப்போட்டிக்கு வருகை தந்த குழுவினரை மகிழ்விக்க தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் உடரட்ட, பஹத ரட்ட மற்றும் சப்ரகமுவ மரபுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நடனக் கலைஞர்கள் அடங்கிய ஒரு பெரிய குழுவின் முன், மூன்று பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து பங்கேற்பாளர்களின் விளையாட்டு மற்றும் தடகளத் திறன்கள் மற்றும் கடந்தகால சாதனைகள் தொடர்பான வீடியோ தொகுப்புக்களை திரையிடுவதன் மூலம் அன்றைய நிகழ்ச்சிகள் தொடங்கியது.

அடுத்து, மூன்று பிரிவுகளின் தடகளப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் தொடங்கப்பட்டன, மேலும் போட்டியின் இறுதி சாம்பியன்ஷிப்பில் சாதனையாளர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

படையணிகளுக்கு இடையேயான புதிய வீரர்களின் விளையாட்டுப் போட்டி (ஆண் மற்றும் பெண்), 23 வது படையணிகளுக்கிடையிலான இராணுவ பரா தடகள சாம்பியன்ஷிப் மற்றும் இராணுவத் தொண்டர் படையணியின் தடகள சாம்பியன்ஷிப் - 2022 ஆகியவற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அனைத்து வீரர்களுக்கும், பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் கிண்ணங்களை வழங்கினார்.

இதற்கிடையில், சிறந்த தடகள வீரர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) படையணியின் புதிய வீரர்களின் விளையாட்டுப் போட்டிக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் கிண்ணங்களை வழங்குவதற்காக, இராணுவத்தின் பதவி நிலைப் பிரதானியும், இராணுவ தடகள விளையாட்டுக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஜகத்கொடித்துவக்கு அவர்கள் அழைக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாபா, 58 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் விபுல இஹலகே, இராணுவ பரா தடகளக் குழுவின் உப தலைவர் பிரிகேடியர் துசித சில்வா, இராணுவ தொண்டர் படையணியின் இராணுவ கரப்பந்தாட்டக் குழுவின் தலைவர் பிரிகேடியர் ராஜா குணசேகர மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதால் இந்த நிகழ்வு அன்றைய தினம் முக்கியத்துவம் பெற்றதுடன் அன்றைய தினத்தின் இறுதி நிகழ்வாக சிறந்த சாதனையாளர்களுக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வழங்குவதற்காக படையணிகளுக்கிடையிலான புதிய போட்டியாளர்கள் விளையாட்டுப் போட்டி, 23 வது படையணிகளுக்கிடையிலான இராணுவ பரா தடகள சாம்பியன்ஷிப் மற்றும் இராணுவ தொண்டர் படையணி தடகள சாம்பியன்ஷிப் - 2022 ஆகியவற்றில் சாம்பியன்ஷிப் வெற்றிக் கிண்ணங்கள் அன்றைய பிரதம அதிதியால் ஆரவாரங்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டது.

இராணுவ தொண்டர் படையணி பயிற்சி கண்காணிப்பாளர் பிரிகேடியர் துசித சில்வா அவர்களின் நன்றி மற்றும் நிறைவுரையுடன் சாம்பியன்ஷிப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது. இறுதிப் போட்டியில் சிறந்த சாதனையாளர்களின் சுருக்கமான சுருக்கம் பின்வருமாறு;

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தடகள சாம்பியன்ஷிப் - 2022

சாம்பியன்ஷிப் கிண்ணம்:

ஆண்கள் பிரிவு - இலங்கை மின் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் படையணி

பெண்கள் பிரிவு - இலங்கை சமிக்ஞை படையணி

இரண்டாம் இடம்:

ஆண்கள் பிரிவு - இலங்கை இலேசாயுத காலாட் படையணி

பெண்கள் பிரிவு - இலங்கை இராணுவ பொது சேவை படையணி

23வது படையணிகளுக்கிடையிலான இராணுவ பரா தடகள சாம்பியன்ஷிப்

சாம்பியன்ஷிப் கிண்ணம்:

ஆண்கள் பிரிவு - இலங்கை இலேசாயுத காலாட் படையணி

இரண்டாம் இடம்:

ஆண்கள் பிரிவு - விஜயபாகு காலாட் படையணி

படையணிகளுக்கிடையிலான புதியவர்கள் விளையாட்டு போட்டி

சாம்பியன்ஷிப் கிண்ணம்:

ஆண்கள் பிரிவு - கெமுனு ஹேவா படையணி

பெண்கள் பிரிவு – 5 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி

இரண்டாம் இடம்:

ஆண்கள் பிரிவு - விஜயபாகு காலாட் படையணி

பெண்கள் பிரிவு - இலங்கை சமிக்ஞை படையணி