Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2022 19:01:06 Hours

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிளவல் அதிகாரிகள் இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடல்

தியத்தலாவ இலங்கையில் கல்வியற் கல்லூரியில் உள்ள மூன்று வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகள் (மாலைத்தீவு மற்றும் சாம்பியா) உட்படபாடநெறி 91, 91 (பி), குறும் பாடநெறி 19, 61 (தொண்டர்), மற்றும் பெண்கள் பாடநெறி 19, 18 (தொண்டர்) ஆகியவற்றின் பயிலிளவல் அதிகாரிகள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வியாழக்கிழமை (10) சந்தித்தனர்.

பயிலிளவல் அதிகாரிகள், தனது அதிகாரவாணைக்கு முன்பதாக இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் இறுதி விளக்கக்காட்சி ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, இராணுவ அறிவினை 'ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் தெற்காசியாவில் அதன் விளைவுகள்' என்ற கருப்பொருளில் இராணுவத் தளபதி பரீட்சித்தார்.

இச்சந்திப்பின் போது, இராணுவத் தளபதி ரஷ்யா - உக்ரைன் போர் மோதல் மற்றும் நமது தேசிய நலன்களில் அதன் தாக்கம், தெற்காசிய நாடுகளில் பாதுகாப்பு இராஜ தந்திரத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம், புதிய இராணுவ உத்திகள் மற்றும் பயன்படுத்தப்படும் தந்திரோபாயங்கள், கற்க வேண்டிய இராணுவ பாடங்கள் போன்றவை குறித்து கருத்து தெரிவித்தார்.

தியத்தலாவைவில் நடைபெறும் வழமையான விடுகை அணிவகுப்பின், போது தங்கள் அதிகாரவாணையிணை பெற எதிர்பார்க்கும் பயிலிளவல் அதிகாரிகள், இராணுவத் தளபதியை தலைமையகத்தில் தங்களை சந்தித்தமைக்கு இராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி பயிலிளவல் அதிகாரிகளுக்கு சிறப்பு நினைவுச் சின்னங்களை வழங்கினார், அதே நேரத்தில் அறிவொளியூட்டும் ஆராய்ச்சிப் பணி மற்றும் இறுதி விளக்கக்காட்சிக்கு தளபதி வாழ்த்து தெரிவித்தார்.

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கேணல் பீஎன்எஸ்பீ ரங்கம ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, இலங்கை இராணுவ பயிற்சி கல்லூரியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் மேஜர் என்எஸ்பீ த சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் சில பாடநெறி அதிகாரிகளும் தளபதியின் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டனர்.