Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2022 15:34:33 Hours

இராணுவத்தின் முன் முயற்சியில் ஓமந்த மகா வித்தியாலய மாணவர்களுக்கு கணினிகள் வழங்கல்

14 (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன் கேணல் ஜி.எச்.ஜே.ஐ விஜேரத்ன அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் பிலியந்தலை பிரதேசத்தின் அனுசரனையாளரின் உதவியுடன் 2022 நவம்பர் 23 ம் திகதி காலி மாவட்டத்தில் உள்ள 40 மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியதுடன் துணைக்கருவிகளுடன் கூடிய இரண்டு டெஸ்க்டாப் கணினிகளும் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இப்பகுதியில் 613 வது காலாட் பிரிகேட் படையினர் சேவையாற்றுகின்றனர்.

இத் திட்டமானது 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலுக்கமைய 613 வது காலாட் பிரிகேட் தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத் அவர்களினால், 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினரால் பொருளாதாரச் சுமைகளிலிருந்து விடுபடவும், அவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு உலர் உணவு பொதியிலும் ரூ. 2,000/= பெறுமதியான அரிசி, பருப்பு, சீனி மற்றும் தேயிலை என்பன உள்ளடக்கப்பட்டதுடன் இத் திட்டத்தின் மொத்த செலவு இரண்டு கணினிகளுக்கான செலவு உட்பட சுமார் 380,000.00 ரூபாயாகும்.

14 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.