Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th June 2022 21:00:19 Hours

இராணுவத்தின் ஒருங்கிணைப்பில் 50 கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவின் 521 வது பிரிகேட் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கமைவாக, மிருசுவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐம்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 5000/= ரூபா பெறுமதியான குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள் சனிக்கிழமை (25) வழங்கி வைக்கப்பட்டன.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் 52 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க கனடாவில் வசிக்கும் திரு ரஜிகரன் சண்முகரத்தினம் அவர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவ முன்வந்தார். 521 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர், எம்.எம். சல்வத்துர மற்றும் அனைத்து நிலையினரும் குடும்ப சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் கிராம சேவை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விநியோக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

11 வது விஜயபாகு காலாட்படை படையணியின் சிப்பாய்களால் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டமானது நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஊக்குவிக்கும் அடையாளமாக கருதி, 11 வது விஜயபாகு காலாட்படை படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின்படி இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ, வடமராட்சி வடக்கு மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு அல்வா பிள்ளை ஸ்ரீ மற்றும் பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு சுஜீவ் இட்டமல்கொட உட்பட பல அழைப்பாளர்களும் அன்றைய நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.