Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th July 2019 12:02:21 Hours

இராணுவத்தினரின் பங்களிப்போடு இடம் பெற்ற வருடாந்த தக்ஷின தலதா பெரஹரா நிகழ்வுகள்

பொலன்நறுவை சோமவதிய ரஜமஹா விகாரையின் வருடாந்த தக்ஷின தலதா பெரஹரா நிகழ்வுகள் எசெல போயா தினத்தை முன்னிட்டு (16) ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.

இவ் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்விற்கு இலங்கை இராணுவமானது அலங்கரிக்கப்பட்ட வர்ண விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டதோடு பாதுகாப்பு சேவைகளும் வழங்கப்பட்டது. இவ்வாறன காட்சிப்படுத்தப்பட்ட வர்ண விளக்குகள் சோமவதிய ரஜமஹா விகாரையின விகாராதிபதியான பகாமுனே ஸ்ரீ சுமங்கள நாயக்க தேரர் அவர்களின் பங்களிப்போடு புத்த சாசன அமைச்சரான திரு காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக சிவில் தொடர்பாடல் அதிகாரியான லெப்டின்னட் கேர்ணல் பிரியந்த விஜயகோண் போன்றோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் வரலாற்று பிரசித்தி பெற்ற இச் சோமாவதிய விகாரையில் புத்த பெருமானின் பல் விசேடமாக வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது கலாச்சாரபூர்வமான நடனங்கள் தீச் சுடர் நடனங்கள் கண்டிய நடனங்கள் மற்றும் பலவாறான நடனங்கள் அத்துடன் யானை நடனங்கள் போன்றன இடம் பெற்றன. jordan release date | Nike Shoes