Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th June 2022 15:00:08 Hours

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ஏதம்பகஸ்கட ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நன்கொடையாளரின் அனுசரணையில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வவுனியா கல்வி வலயத்திலுள்ள ஏதம்பகஸ்கட ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, கல்வி உபகரணங்கள் மற்றும் ஏணைய பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு தேவிந்த மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் அனுசரணையுடன் 65 பரிசுப் பொருட்களை விநியோகிக்கும் திட்டம், இலங்கை இராணுவத் தலைமையகத்தின் செயல்பாட்டு பணிப்பகத்தின் பொது பதவி நிலை கேணல் பிரதீப் மாபலகம அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

அந்தப் பரிசுப் பொருட்களில் பாடப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், பேனாக்கள், பென்சில்கள், கருவிப்பெட்டிகள், பயிற்சி புத்தகங்கள் இருந்தன. 22 ஜூன் 2022 அன்று பாடசாலையின் முறையான விழாவின் போது பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடிகளால் மிகவும் பாதிக்கப்பட்ட தரம் 1-5 இல் உள்ள மாணவர்களுக்கு, 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமன் லியனகே அவர்கள் அந்தப் பரிசுப் பொதிகளை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வழங்கிவைத்தார்.

563 வது பிரிகேட் தளபதி கேணல் சஞ்சய பெரேரா மற்றும் 7 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி, அதிபர், ஆசிரியர்கள் மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளின் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் அந்த பரிசுப் பொதிகளை விநியோகித்தனர்.

ஏதம்பகஸ்கட வண. ஸ்ரீ சுதர்மாராம விகாரையின் பிரதம விகாராதிபதி ஸ்ரீ சுமங்கல சித்தார்த்த தேரர், திரு தேவிந்த மற்றும் அவரது குடும்பத்தினர், 75 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் விசேட மதிய உணவு விநியோகத்தில் கலந்துகொண்டனர்.