Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2022 20:57:26 Hours

இராணுவத் தளபதி விடுமுறை தினத்தில் பனாகொட விஜயம்

பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (14) நண்பகல் பனாகொட இராணுவ முகாமில் பணியில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் மற்ற சிப்பாய்களும் மதிய உணவு நேரத்தில் இருக்கும் வேளையில் அங்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.

இலங்கை சமிக்ஞைப் படையணியின் தளபதியும் தலைமை சமிக்ஞை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் பல சிரேஷ்ட அதிகாரிகள் , சிவில் உடை அணிந்திருந்த சரேஷ்ட அதிகாரிகள் வருகை தந்த, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை வரவேற்றதுடன் அங்குள்ள உணவு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை உன்னிப்பாகக் கவனித்து, சமையல்காரர்கள் மற்றும் சிப்பாய்களுடன் தயாரிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் உள்ளடங்கும் கலோரிகளின் போன்றவற்றைக் கேட்டறிந்து அவர்களிடம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். சிப்பாய்களிடம் தகவல்களைப் பெறும் நோக்கத்துடன் பெண் வீரர்களின் விருந்தகத்தில் மதிய உணவுக்காக கலந்து கொண்ட அவர்களிடமும் சில எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

இத்திடீர் விஜயத்தின் போது, இராணுவத் தளபதி பனாகொடவில் உள்ள இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பாளர் அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படும் விவசாய பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையத்திற்கு விஜயம் செய்தார். அதனைத் தொடர்ந்து, இலங்கை பீரங்கி படையணி, இலங்கை பொறியாளர்கள் படையணி, இலங்கை சமிக்ஞை படையணி, இலங்கை இலேசாயுத காலாட்படையணி, இராணுவ சேவைப் படையணி , இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி சிப்பாய்களின் விருந்தகங்களுக்கு நேரில் சென்று தகவல்களை சேகரித்தார். மேலும் சென்று அவர்களுடன் சுதந்திரமாக கலந்து பேசி, உணவின் தரம் மற்றும் இன்ப துண்பங்கள் குறித்தும் விசாரித்தார்.

இராணுவத் தலைமையகத்தின் இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்திரி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இராணுவத் தளபதியின் பனாகொட இராணுவ படையணிக்கான விஜயத்தில் கலந்து கொண்டனர்.