Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2022 14:55:45 Hours

இராணுவத் தலைமையகத்தில் முதல் வேலை நாளுக்கான வாழ்த்தும் இராணுவத் தளபதியின் உரையும்

ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகம் புத்தாண்டின் முதல் வேலை நாளை திங்கட்கிழமை (3) காலை அரச சேவையாளர் உறுதிமொழி வாசிப்பு மற்றும் வாழ்த்து பரிமாற்றத்துடன் ஆரம்பமானது.

தேசியக் கொடி மற்றும் இராணுவக் கொடியை ஏற்றுதல், தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் இசைத்தல் அரச உறுதிமொழி வாசித்தல் மற்றும் தளபதியின் புத்தாண்டு உரை ஆகியவை இராணுவத் தலைமையகத்தில் இன்றைய நிகழ்வின் முக்கிய அம்சங்களாகும்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வருகையுடன் இன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், சிரேஷ்ட அதிகாரிகளின் அணிவகுப்புடன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவப் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோர் முறையே தேசியக் கொடியையும் இராணுவக் கொடியையும் ஏற்றி வைத்தனர்.

நிகழ்விடத்திற்கு வந்திருந்த அனைவரும் தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் பாடியதன் பின்னர், இரண்டு நிமிட மௌனத்துடன் வீரமரணம் அடைந்த அனைத்து போர்வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தினர். நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்கள் அரச உறுதிமொழியை வாசித்ததுடன் அன்றைய நிகழ்வு தொடங்கியது.

பிறகு, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உரை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி உரை ஆற்றுகையில் கடந்த ஆண்டு பல்வேறு சவால்களை நிறைவேற்றுவது மற்றும் தேசிய பாதுகாப்பு உறுதிப்பாடுகளை சுருக்கி, நாட்டின் நலன்களுக்காக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட புதிய பொறுப்புகளுடன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை விளக்கினார்.

“தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் முன்னோடிப் பங்கை ஆற்றிவரும் இலங்கை இராணுவத் தலைமையகத்தின்

அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 2022 புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்பதற்காக மிக உயர்ந்த தியாகத்தை செய்த இராணுவத்தில் உள்ள அனைத்து போர்வீரர்களுக்கும் மோச்சம் பெரவும் வாழ்த்துகிறேன். அதேபோன்று, நடவடிக்கைகளின் போது காயங்களுக்கு உள்ளான அனைத்து போர்வீரர்களும், இன்னும் குணமடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்டு விரைவில் குணமடையவும், அவர்களுக்கு அமைதி மற்றும் செழிப்புடன் வாழ இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவும் விரும்புகிறேன் எனவும் கூறினார்.

மேலும், கடந்தகால தளபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்கள் விலைமதிப்பற்ற சேவைகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் நாட்டின் தேசிய பாதுகாப்பை பன்முக அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதில் இராணுவம் இருந்து வருகிறது. அந்தக் கடமைகளை நிறைவேற்றும் போது, இலங்கையின் தடுப்புப் பணிகளை நோக்கிய இலங்கை இராணுவத்தின் விதிவிலக்கான செயல்பாட்டு அர்ப்பணிப்பு வடிவங்கள், கொவிட்-19 கட்டுப்பாடு மற்றும் கொவிட்-19 பரவலுக்கு எதிரான தற்போதைய தடுப்பூசி பணிகள் ஆகியவை உள்ளடங்கும் சேவைகளாகும். இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் அந்த அர்ப்பணிப்பான பணியில் இராணுவத்தின் பங்கு பாராட்டப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இராணுவத்தின் தொலை நோக்குப் பார்வையின்படி, கடந்த ஆண்டில் 2020-2025’ க்கான முன்னோக்கிய மூலோபாய திட்டம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அதேபோன்று, அதிமேதகு ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் பேரில் பசுமை விவசாயத்தின் செயற்பாட்டு மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், இந்த தேசிய முயற்சிக்கு பங்களிப்பவர்கள் என்பதில் நாம் பெருமையடையலாம்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனமான ‘சௌபாக்ய தெக்ம’ (செழிப்பு மற்றும் சிறப்பின் காட்சிகள்) இல் கூறப்பட்டுள்ளபடி, இராணுவம் பல பசுமைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது மற்றும் அவற்றில் சில ஏற்கனவே வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், பல அபிவிருத்து திட்டங்கள், விவசாயத் திட்டங்கள், சுகாதாரச் சேவைகள், உட்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றில் இராணுவம் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.கொடூரமான பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை விடுவித்து, 72 வருடங்களாக தாய்நாட்டைப் பாதுகாத்த தேசத்தின் அஞ்சாத மீட்பராக இலங்கை இராணுவம், கொவிட்-19 தொற்று, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. ,அதற்காக நாம் பெருமைப்படலாம்.

இலங்கை இராணுவத்தின் தொழில்சார் முன்னேற்றத்திற்கு தொலைநோக்கு வழிகாட்டி மற்றும் தலைமைத்துவத்தை வழங்கும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்களையும் இந்த தருணத்தில் மரியாதையுடன் நினைவுகூர வேண்டும்.. மேலும், முதலாவது படையணி ஆரம்பம், புத்தலவில் இராணுவப் போர்க் கல்லூரி, என்பன 2020-2025' இராணுவத்தின் முன்னோக்கிய மூலோபாய திட்டத்துடன் பொருந்தக்கூடிய சில மேம்படுத்தப்பட்ட திட்டங்களாகும். மேலும், படையணி தலைமையகங்கள், பயிற்சிப் பாடசாலைகள், முகாம்கள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்களுக்கான வீட்டுத் திட்டங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றை ஏற்கனவே முன்னெடுத்து வருகின்றது.

கொவிட் -19 இன் மத்தியில் கடமைகளைச் செய்தபோது கடந்த ஆண்டில் இராணுவ வீரர்களின் நலன்புரித் தேவைகளை எங்களால் பூர்த்தி செய்ய முடிந்தது. வரவிருக்கும் ஆண்டில் இராணுவ வீரர்களின் சார்பாக மேலும் மேலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை வழங்க எதிர்பார்க்கிறேன், இது திறன்கள் மற்றும் தொழில்முறை தரத்தை மேம்படுத்தும். மேலும், இராணுவத்தின் 2020-2025' க்கான முன்னோக்கிய மூலோபாய திட்டத்திற்கு இணங்க, இராணுவப் போர்க் கல்லூரியாக புத்தல அதிகாரி தொழிலாண்மை மேம்பாட்டு மையத்தை சமீபத்தில் மறுவடிவமைப்பு செய்ததை இங்கு குறிப்பிடுவது மதிப்புக்குரியது. 2021 ஆம் ஆண்டு பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியின் போது போர்வீரர்கள் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தாய்நாட்டிற்கு அதிக புகழையும் கண்ணியத்தையும் கொண்டு வந்தனர்.

மேலும், பசுமை விவசாயத்தின் செயல்பாட்டு மையத்தை டிசம்பர் 02 அன்று அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது, கொவிட்-19 பரவலுக்கு எதிரான எங்கள் பயனுள்ள நடவடிக்கைகளுக்குப் பிறகு எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மற்றொரு நம்பிக்கையாகும். பசுமை விவசாயத்தின் செயல்பாட்டு மையத்தின் தலைவராக, இராணுவம் ஏற்கனவே பல பசுமைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது மற்றும் இராணுவம் திறமையானது மற்றும் "முடியாதவை ஏதும் இல்லை " என்ற கருப்பொருளில் செயல்படத் தயாராக உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. தேசிய சவாலாக கருதி சேதனை பசளைகளை உற்பத்தி செய்வதற்கான எங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்து இராணுவ படையினர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட மட்டங்களில் பல சவால்களைக் கடந்து தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வரும் 2022 ஆம் ஆண்டில் தைரியம், வலிமை மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றை கொண்ட ஆண்டாக அமைய ஆசீர்வதிக்க விரும்புகிறேன். 2022 ஆம் ஆண்டு முழுவதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அமைதி, மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு இருக்கட்டும் எனக் கூறிய இராணுவத் தளபதி தனது உரையை முடித்தார்

இந்தச் நிகழ்வின் போது, இராணுவ பிரதிப் பதவி நிலை பிரதானி, பணி நிலை அதிகாரிகள் மற்றும் இராணுவத் தலைமையகத்தில் சேவையாற்றும் சிப்பாய்கள் உட்பட அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.