Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2022 19:47:04 Hours

இராணுவ வீரர்களின் 71 வீடுகளுக்கு தளபதியின் மானிய நிதி

இராணுவ தளபதியின் ரணவிரு வீடமைப்பு நிதியத்தின் 8 ஆம் கட்டத்தின் கீழ் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும் அல்லது பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை நிறைவு செய்வதற்கும் படையினருக்கான நிதி வழங்கும் நிகழ்வு இன்று (29) இராணுவத் தலைமையக வளாகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

ரணவிரு வீடமைப்பு நிதியத்தின் 8ஆம் கட்டத்தின் கீழ், 31 புதிய வீடுகளுக்கான நிதியை வழங்குவதற்கும், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட 40 வீடுகளை நிறைவு செய்வதற்கும் இராணுவத் தளபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதற்கமைய புதிய வீட்டிற்கான ஒவ்வொரு பயனாளிக்கும் ரூபா 1.5 மில்லியன் மற்றும் வீடு முழுமைப்படுத்த இத்திட்டத்தின் கீழ் 750,000/= பெறுவதற்கு உரிமையுண்டு என்பது குறிப்பிடதக்கதாகும்.

போர்வீரர்கள் விவகார பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எம். மாயாதுன்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களால் பிரதம அதிதி வரவேற்கப்பட்டார்.

ரணவிரு வீடமைப்பு நிதி பற்றிய அறிமுக அறிவுரையின் பின்னர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, மேஜர் ஜெனரல் சி.டி.வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் இணைந்து பண காசோலைகளை பயனாளிகளுக்கு விநியோகித்தார்.

காயமடைந்த மற்றும் மேலும் சேவையில் உள்ளவர்கள், ஓய்வு பெற்றவர்கள், வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட வீரர்களின் புதிய வீடு என்ற கனவை நனவாக்கும் நோக்கத்துடன், இராணுவத் தளபதியின் ரணவிரு நிதியம் 2015 ஆம் ஆண்டு போர்வீரர்கள் விவகார பணிப்பகத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு முதல் 264 புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்கும் பகுதியளவு கட்டப்பட்ட 71 வீடுகளை முழுமைப்படுத்தவும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

பின்னர்,இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய நிகழ்வின் இரண்டாவது பகுதியான 'படையினர் வேலை வங்கி' இணைய தளம் இராணுவத் தளபதியால் ஆரம்பிக்கப்பட்டது, இது ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை பல்வேறு தொழில்முறை மற்றும் தொழில் துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கத் தயாராக உள்ளது.

தலைமை சமிஞ்சை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்எம்எல்டி ஹேரத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜிஎல்எஸ்டபிள்யூ லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சி ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ், தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தினரால் ‘படையினர் வேலை வங்கி’ இணைய தளம் வடிவமைக்கப்பட்டது. இது ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை பெற உதவுகிறது. நாடளாவிய ரீதியில் 13 நிறுவனங்கள் ஏற்கனவே புதிய இணைய தளத்துடன் பதிவு செய்துள்ளன.

தலைமை சமிஞ்சை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்எம்எல்டி ஹேரத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்கிரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி, மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜேஎஆர்எஸ்கே ஜயசேகர யூஎஸ்பீ பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள், சிப்பாய்கள் உட்பட பயனாளிகள் மற்றும் இராணுவ வீரர்களின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.