Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th April 2020 19:58:43 Hours

இராணுவ பௌத்த சங்கத்தினால் பௌத்த விஹாரைகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுபபடுத்தும் முகமாக ஊரடங்கு உத்தரவு விதித்தமையினால் பாதிக்கப்படுகின்ற பிக்குகளை கருத்திற்கொண்டு, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் இலங்கை இராணுவ பௌத்த சங்கமானது, பௌத்த விஹாரைகளில் உள்ள பிக்குகளின் பயன்பாட்டிற்காக உலர்ந்த மற்றும் புதிய உணவுப் பொதிகளை நன்கொடையாக வழங்க நடவடிக்கை எடுத்தது.

இராணுவ பௌத்த சங்கத்தின் தலைவரும், மேற்கு பாதுகாப்புப் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன, இப்பகுதியில் உள்ள 16 புத்த விஹாரைகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி திட்டத்தைத் தொடங்கினார். பிரதான திட்ட ஆரம்பிப்பு நிகழ்வு திங்கட்கிழமை (6)ஆம் திகதி ருக்மல்கம, தர்ம விஜயலோகா விஹாரைகளில் நடைபெற்றது. அங்கு அவர் கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரி சங்க சபையின் மகா நாயக்கரும், வென் இத்தேபனே ஸ்ரீ தம்மலங்கர நாயகே தேரரும் விஹாரையின் பிரதான மத போதகருமான பௌத்த குருவிற்கு முதலாவது உலர் உணவுப் பொதியினை வழங்கினார்.

இந்த உலர் உணவுப் பொதிகள் மற்ற 15 பௌத்த விஹாரைகளுக்கும் விநியோகிக்கப்படும்.url clone | Nike