Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st September 2019 10:50:03 Hours

இராணுவ பொறியியல் பிரதானி தலைமையகங்களுக்கு விஜயம்

இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரதானி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார அவர்கள் 8,9 மற்றும் 10 ஆவது பொறியியல் படையணி தலைமையகங்களுக்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை இம் மாதம் 16 – 18 ஆம் திகதிகளில் மேற்கொண்டார்.

தலைமையகங்களுக்கு வருகையை மேற்கொண்ட பொறியியல் பிரதானியை இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார். பின்னர் பிரதானியினால் படையினர்களுக்கு தற்போதைய செயற்பாட்டு திட்டங்கள் மற்றும் கடமைகள் தொடர்பான் விடயங்கள் தெளிவூட்டப்பட்டன.

பின்னர் பூ ஓயா தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தி பின்பு முல்லைத்தீவு மற்றும் முகமாலை பகுதிகளிற்கு விஜயத்தை மேற்கொண்டு மிதிவெடி அகற்று பணிகள் தொடர்பான விடயங்களையும் பார்வையிட்டார்.

மேலும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் கீழ் இயங்கும் பிரதேசங்களிற்கும் விஜயத்தை மேற்கொண்டார். அத்துடன் கஜசிங்கபுரத்தில் அமைந்துள்ள ஆயுத களஞ்சியசாலையும் சென்று பார்வையிட்டார்.

பொறியியல் பிரதானியுடன் பொறியியல் பிரிக்கட் தலைமையகத்தின் தளபதியான பிரிகேடியர் ஏ என் அமரசேகர அவர்களும் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Authentic Sneakers | Shop: Nike