Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd November 2022 10:00:53 Hours

இராணுவ படையணிகளுக்கிடையிலான எல்லே போட்டி – 2022 இல் 450 எல்லே வீரர்கள் பங்குபற்றல்

ஐந்து பெண் படையலகுகள் உட்பட இராணுவத்தின் பதினாறு படையணிகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட எல்லே வீரர்கள் பங்குபற்றிய இராணுவப் படையணிகளுக்கு இடையிலான எல்லே -2022 போட்டியானது 2022 நவம்பர் 14 தொடக்கம் 21 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடாத்தப்பட்டது.

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணிகள் போட்டியிட்டதுடன், 4 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் 5 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணிகள் பெண்களுக்கான இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டன.

ஆண்கள் பிரிவில், இலங்கை இராணுவ சேவைப் படையணியை இலங்கை இலேசாயுத காலாட் படையணியை தோற்கடித்து சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்ததுடன், இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி போட்டியின் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

படையணிகளுக்கிடையிலான எல்லே சம்பியன்ஷிப் - 2022 இல் சிறந்த வீரராக இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய் என்.சி பாலசூரிய தெரிவு செய்யப்பட்டார். இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆர்ஏஎஸ்எச் ஜயரத்ன மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சிப்பாய் டிஏடிசி கல்ஹார ஆகியோர் முறையே சிறந்த களத்தடுப்பாளர் மற்றும் சிறந்த ஆட்டக்காரர் விருது பெற்றனர்.

பெண்கள் பிரிவில் 5 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி 4 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியை வீழ்த்தி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து சம்பியனாகியது. 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியினர் போட்டியில் 3 வது இடத்தைப் பெற்றனர்.

படையலகுகளில் எல்லே சம்பியன்ஷிப் போட்டியில் 5 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எம்.என்.எல்.கே. தமயந்தி சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார். 5 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் கே.சி.கே. சமன்மாலி மற்றும் 5 வது(தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் வி.பி.வய். தர்மதாச முறையே சிறந்த களத்தடுப்பாளர் மற்றும் சிறந்த ஆட்டக்காரர் விருது பெற்றனர்.

பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்கள் கலந்துகொண்டதுடன், பிரதி பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இராணுவ போர்க்கருவி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹிரோஷா வணிகசேகர, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, நிலையத் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் எல்லே ரசிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வின் போது பல்வேறு வண்ணமயமான அம்சங்களும் நிகழ்வினை மகிழ்வித்தன.

இறுதிப் போட்டியின் பின்னர் அன்றைய பிரதம விருந்தினர், வருகை தந்த வேறு சில சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து, வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள், கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இராணுவ விளையாட்டு பணிப்பகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவ எல்லே சங்கத்தின் தலைவரும் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இலங்கை இராணுவத்தின் இராணுவ எல்லே சங்கம் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சரியான முறையில் ஒருங்கிணைத்தது.