Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th September 2021 14:00:50 Hours

இராணுவ நடமாடும் தடுப்பூசி குழுவினரால் மினுவங்கொடையில் நூறு வயதை எட்டியவருக்கு தடுப்பூசி

இராணுவத்தினரால் மினுவங்கொடையில் இன்று (16) காலை ஆரம்பிக்கப்பட்ட கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் போது வரலாற்று சிறப்பம்சமாக அமையும் வகையில் மினுவங்கொட கலவான பகுதியில் வசிக்கும் 102 வயது நிரம்பிய திருமதி வை.ஏ. சீலாவதி அவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டது.

முதலில் இராணுவத்தினரால் மேல் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கொவிட் – 19 தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் இராணுவ மருத்துவ படையின் சிப்பாய்களால் முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சமூகத்தில் பலவீனமான பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டதுடன் அதற்காக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமைகத்தின் சேவைகளுக்கு பொது மக்களின் பாராட்டுக்களும் கிடைத்துள்ளன.

இத்திட்டம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கமைய ஆரம்ப கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதுடன் ஏனையவர்களுக்கு பின்னர் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மினுவங்கொடையில் வசிக்கும் நூறு வயதை கடந்தவர் தனது முதலாவது தடுப்பூசி தொகுதியை மினுவங்கொடையிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பெற்றுக்கொண்டிருந்ததோடு அவருக்கான இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் இராணுவ நடமாடும் தடுப்பூசி சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இராணுவ நடமாடும் தடுப்பூசி சேவை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் என்பன தொலைதூர பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் நிலையில், அவசியம் உள்ளவர்கள் கொவிட் -19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையதின் 1906 அல்லது 0112860002 என்ற அவசர அழைப்பு இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்வதனம் மூலம் வீடுகளுக்கே தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.