Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th November 2022 20:10:22 Hours

இராணுவ தளபதியின் தலைமையில் பனாகொடவில் உலர் உணவு பொதிகள் விநியோகம்

இராணுவ படையினர் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு இராணுவத் தளபதியின் எண்ணக்கருவுக்கமைய உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பனாகொட ஸ்ரீ போதிராஜாராமயவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த இந்தத் திட்டமானது, முதலில் ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்த்தூள், மாவு போன்றவற்றை உள்ளடக்கிய 250 உலர் உணவுப் பொதிகளை பயனாளிகளை விகாரைக்கு அழைபித்து வழங்கப்பட்டது. நாகாநந்தா சர்வதேச பௌத்த நிலையத்தின் உபவேந்தர் வண. போதகம சந்திம நாயக்க தேரர், இராணுவத்தில் பணிபுரியும் இராணுவ மற்றும் சிவில் ஊழியர்களின் சேவைகளைப் பாராட்டி, உலர் உணவுப் பொருட்களுக்கான அனுசரணை வழங்கினார்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.கே.டி.பி. புஸ்ஸல்லா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இராணுவ தளபதியின் அலுவலகம் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவினரின் நெருக்கமான ஒத்துழைப்புடன் முழு விநியோகம் திட்டத்தையும் நடத்த ஏற்பாடு செய்தார்.

இந் நிகழ்வில் முதல் பகுதியின் நிறைவின் பின்னர் அன்றைய பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பனாகொட இராணுவ முகாம் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்றடைந்ததை தொடர்ந்து பனாகொட இராணுவ முகாமில் சேவையாற்றும் 200 இராணுவ மற்றும் சிவில் ஊழியர்களுக்கு நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக நிவாரண உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் பேரில் இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் அரிசி பொதிகள் வழங்கப்பட்டன.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் கே.வி.என்.பி. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி , பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் டி.ஏ. அமரசேகர யு.எஸ்.பீ மேற்கு பாதுகாப்பு படை தலைமையக சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.