Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st September 2019 11:32:09 Hours

இராணுவ தளபதியவர்கள் ஶ்ரீ நாக விகரைக்கு விஜயம்

யாழ்ப்பாண நகரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ நாக விகாரைக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம் மாதம் (20) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.

அங்கு சென்ற இராணுவ தளபதியவர்கள் நாக விகாரையின் விகாராதிபதியான மீஹாஹஜந்துர சிறிமாலா தேரர் அவர்களை சந்தித்து அவரிடம் ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார்.

இவர்கள் இருவரது இச்சந்திப்பின் போது தேரர் அவர்கள் புதிதாய் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட இராணுவ தளபதியவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து தேசத்தின் நலன்களுக்காகவும், தேசிய கடமைகள் மற்றும் பாதுகாப்பை முன்னெடுக்க சகல ஆசிர்வாதங்களும் உண்டாக இராணுவ தளபதியவர்களுக்கு ஆசிர்வாதத்தை வழங்கி வைத்தார். இறுதியில் இவர்களது இச்சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இராணுவ தளபதியவர்கள் பெளத்த தேரர் அவர்களுக்கு நினைவுப் பரிசாக வெள்ளி கேத்தலொன்றையும் வழங்கி வைத்து தமது எண்ணக் கருத்துக்களை வெளிப்படுத்தும் முகமாக விகாரையிலுள்ள புத்தகத்தில் தனது கருத்துக்களை எழுதி வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களும் இணைந்து கொண்டார். Sport media | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ