Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st September 2019 13:12:14 Hours

இராணுவ தளபதிக்கு யாழ் தலைமையகத்தில் வரவேற்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் உத்தியோக பூர்வமான விஜயத்தை இம் மாதம் (20) ஆம் திகதி மேற்கொண்டார்.

யாழ் தலைமையயகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து இராணுவ தளபதி அவர்கள் யாழ் தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி மலரஞ்சலியும் செலுத்தினார்.

பின்னர் இராணுவ தளபதியவர்கள் தலைமையக வளாகத்தினுள் தனது வருகையை நினைவு படுத்தும் முகமாக மரநடுகை மேற்கொள்ளப்பட்டு பின்பு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.

பின்பு இராணுவ தளபதியவர்கள் யாழ் தலைமையக கேட்போர் கூடத்தில் முன்னரங்க பாதுகாப்பு கட்டளை தளபதி, படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள் மற்றும் படையணியின் கட்டளை அதிகாரிகளை சந்தித்து பாதுகாப்பு விடயங்கள் மற்றும் கடமை பொறுப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இராணுவ தளபதியவர்கள் 1990 ஆண்டுகளில் இலங்கை இராணுவத்தில் இளம் கட்டளை அதிகாரியாக காலாட்படை பட்டாலியனுக்கு கட்டளையிட்டார், 1995 ஆம் ஆண்டுகளில் ரிவிரெச நடவடிக்கைகளின் மூலம் யாழ் குடாநாட்டை விடுவிப்பதற்காக நடவடிக்கைகள் நடாத்தப்பட்டது. புலி பயங்கரவாதிகளின் எதிரான நடவடிக்கைகள் மிக உச்சகட்டத்தில் இருந்த போது தற்போதைய இராணுவ தளபதியவர்கள் எயார் மொபைல் படைப் பிரிவின் கட்டளை தளபதியாக கடமை வகித்தார். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முகமாலை முன்னோக்கி பாதுகாப்பு அரன்களை மீண்டும் கைப்பற்றுவதில் தளபதியவர்கள் முக்கிய பங்கு வகித்தார், பின்னர் அது 'இலங்கையின் தேசிய முன்னணி' என்று அழைக்கப்பட்டது, அந்த நேரத்தில் பாதி பாதுகாப்பு எல்.டி.டி.ஈ.யின் கட்டுப்பாட்டில் இருந்தது. best shoes | nike