Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2022 11:13:23 Hours

இராணுவ தளபதிக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட பிரத்தியேக பாதுகாப்பு உபகரண தொகுதிகள் நாடளாவிய ரீதியிலுள்ள 25 வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பு

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அமெரிக்காவில் வசிப்பவர்கள் மற்றும் அமெரிக்காவிலிருக்கும் சங்கமொன்றினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பிரத்தியேக பாதுகாப்பு உபகரண தொகுதிகள் சில நாட்களுக்கு முன்னர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களினால் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் அத்தொகுதிகள் நாடளாவிய ரீதியிலுள்ள 25 வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. அதற்கமைய, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நுவரெலியா வைத்தியசாலை, 12 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் அம்பலாந்தோட்டையிலுள்ள மாகாண வைத்தியசாலைக்கும், 23 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் ஹிங்குரங்கொட ஆதார வைத்தியசாலைக்கும், 14 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் நாராஹேன்பிட்டி டெங்கு ஒழிப்பு பிரிவிற்கும், 61 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பக பிரிவிற்கும், 24 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் கல்முனை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பக பிரிவிற்கும் மற்றும் அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பக பிரிவிற்கும், 57 வது படைப்பிரிவு தலைமைகத்தினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கும், 59 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை, 54 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்கும், 56 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் வவுனியா பொது வைத்தியசாலைக்கும், 21 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் கெகிராவ ஆதார வைத்தியசாலைக்கும், 22 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கும், 11 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் கண்டி மாவட்ட மருந்துவ விநியோக பிரிவிற்கும், 58 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் புத்தளம் பொது வைத்தியசாலைக்கும், 51 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் யாழ். போதனா வைத்தியசாலைக்கும், 112 வது பிரிகேட் தலைமையகத்தினால் பதுளை பொது வைத்தியசாலைக்கும், 611 வது பிரிகேட் தலைமையகத்தினால் கேகாலை பொது வைத்திசாலைக்கும், கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தினால் சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்கும், 583 வது பிரிகேட் தலைமையகத்தினால் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கும், 111 வது பிரிகேட் தலைமையகத்தினால் மாத்தளை பொது வைத்தியசாலைக்கும், 613 வது பிரிகேட் தலைமையகத்தினால் மாத்தறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்கும், 141 வது பிரிகேட் தலைமையகத்தினால் கம்பஹா பொது வைத்தியசாலைக்கும், திவுலபிட்டிய வைத்தியசாலை, தொம்பே ஆதர வைத்தியசாலை, மற்றும் உடுப்பில ஆதார வைத்தியசாலைக்கும், 121 வது பிரிகேட் தலைமையகத்தினால் பிபில ஆதர வைத்தியசாலைக்கும், 582 வது பிரிகேட் தலைமையகத்தினால் களுத்துறை தேசிய வைத்தியாலைக்கும், 231 வது பிரிகேட் தலைமையகத்தினால் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் நாராஹேன்பிட்டியிலுள்ள கொழும்பு இராணுவ வைத்தியசாலை ஆகியவற்றிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த நன்கொடையானது அமெரிக்காவில் வசிக்கும் ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் ஹெல்த்கேயார் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவிலிருக்கும் இலங்கை சங்கம், மிட்வெஸ்ட் மற்றும் மெட்சர்ப்ளஸ் யுனைடட் இணைந்து சுமார் 200,000 அமெரிக்க டொலர் பெறுமதியான அன்பளிப் பொருட்கள் தனிப்பட்ட முறையில் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான இராணுவத்தின் பங்களிப்பினை கருத்திற்கொண்டு விசேடமாக அச்செயல்பாட்டு மையத்தின் தலைவராக இராணுவ தளபதியவர்கள் வழங்கிய பங்களிப்பை கருத்திற்கொண்டு மேற்படி அன்பளிப்புகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அதன்படி, இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் திங்கட்கிழமை (3) கொழும்பிலுள்ள இராணுவ வைத்திய சாலைக்கு பிரத்தியேக பாதுகாப்பு உபகரண தொகுதிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டதை தொடர்ந்து, அடுத்த ஐந்து தினங்களுக்குள் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமைய சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்பின் மூலம் இலங்கை இராணுவ வைத்திய படையணியினரால் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மேற்படி தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.