Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th May 2020 23:55:56 Hours

இராணுவ தளபதி சிங்கபுர மற்றும் வெலிஓயாவிற்கு விஜயம்

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கஜசிங்கபுர பிரதேசத்தில் உள்ள 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவிற்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்திற்கான நோக்கத்தின் கீழ் இராணுவ தளபதியின் ‘துரு மிதுரு நவ ரடக்' விவசாய மற்றும் அழகுபடுத்தும் திட்டத்திற்கு இணங்க, மேற்கொள்ளப்பட்ட்டு வரும் தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்யும் சிங்கபுர விவசாய பண்ணையை 24ம் திகதி சனிக்கிழமை பார்வையிட்டார்.

அவரின் விஜயத்தின் போது நாட்டின் ஐந்தாவது மிக நீளமான நதியான யான் ஓயாவை ஒட்டியுள்ள நிலங்களில் விவசாயத்திற்கான சாத்தியங்களையும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினார். இராணுவத்தின் இவ் உன்னத திட்டத்திற்கு பிரதேசத்தின் அனுபவமிக்க விவசாயிகள், மாகாண விவசாய மற்றும் நீர்ப்பாசன ஆலோசகர்களின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பாக ஆராய்ந்தார். மேலும் இப்பகுதி விவசாய சமூகங்களுடன் விவசாயத்தின் நவீன தொழில் நுட்பங்களை இராணுவத்தால் பகிர்ந்து கொள்ளக் கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

சுமார் 735 ஏக்கர் தரிசு நிலம் 1980 களில் விவசாய நோக்கங்களுக்காக இராணுவத்திற்கு வழங்கப்பட்டது. அதனை வளமான மண்னாக மாற்றி பின்னர் படையினர் பண்ணையை நடத்தி வருகின்றனர். மேலும் தேசிய உணவு உற்பத்தி தேவையை விரைவுபடுத்துவதற்காக லெப்டினன் ஜெனரல் சில்வா அவர்கள் 'துரு மிதுரு-நவ ரடக் 2' திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் அறிமுகப்படுத்தினார், இதன் மூலம் நாடு முழுவதும் இராணுவத்தினால் விவசாயம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறாக இராணுவத்தால் நன்கு பராமரிக்கப்படும் முக்கிய பண்ணைகளில் சிங்கபுர பண்ணை ஒன்றாகும்,

62 வது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் சாரத சமரகோன்,கஜபா படையணி படைத் தலைமையக தளபதி பிரிகேடியர் மஹிந்த ராஜபக்ஷ, கஜபா படையணி தலைமையக பிரதி தளபதி பிரிகேடியர் ஜிஆர்எம்என் பெர்னாண்டோ சிவில் விவசாய ஆலோசகர்கள் மற்றும் பிரதேசத்தின் அனுபவ விவசாயிகள் சிலரும் அன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர். Best Nike Sneakers | Nike Running