Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2019 19:42:08 Hours

இராணுவ தளபதி அவர்களால் முப்படையினர்களுக்கு பதக்கம் வழங்கி வைப்பு

முப்படையினர்களினதும் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய 2009 ஆம் ஆண்டின் யுத்தத்தின் பின்னர், இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் சேவையாளர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை கௌரவப்படுத்தி, சேவஅபிமாணி பதக்கம் மற்றும் சேவை பதக்கம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் 08 ஆம் திகதி காலை இடம் பெற்ற புதிய இராணுவ தலைமையகம் திறந்துவைக்கும் நிகழ்வின் போது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் ஊடாக பதக்கம் வென்றவர்களின் தகுதிகள் குறித்து ஜனாதிபதி வர்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் சிரேஷ்ட செயலாளரான திரு அசல வீரகோன் அவர்களால் வாசிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் புதிய சேவஅபிமாணி பதக்கம் மற்றும் சேவை பதக்கத்தை பிரதிநிதி குழுவினர்களுக்கு வழங்கிய பின்னர், இராணுவத் தளபதிக்கு புதிய பதக்கங்களை வழங்கினார்.

இந்த பதக்கம் வழங்குவதற்காக ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு ராஜங்க அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளால் மேடைக்கு அழைக்கப்பட்டார்.

இப் பதக்கம் ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய இராணுவ தளபதி அவர்களின் ஆலோசனையுடன், இராணுவ படை நிர்வாக பணியகத்தின் பரிந்துரையின்பேரில் பாதுகாப்பு அமைச்சினால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல், இந்த பதக்கங்கள் முப்படையினர்களுக்கும், பொலிஸாருக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதன்படி, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு இல 2146/12 வர்த்தமானி அறிவிப்பின்படி, இந்த பதக்கங்கள் வழங்க ஜனாதிபதி செயலகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி இறுதி யுத்தம் முடிவின் பின்னர் 6 வருடங்கள் சேவையாற்றிய முப்படையினர்களுக்கும், பொலிஸ் அதிகாரிகள், மற்றும் சிவில் சேவையாளர்களின் அந்தந்த துறையினர்களின் பரிந்துரைக்கு பின்னர் பதக்கங்கள் அணிய தகுதியுடையவர்களாவர், இந்த நிகழ்வில் முப்படையினர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், படையினர், மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், ஜனாதிபதி தனது உரையில், ஊழல் மற்றும் திறமையின்மை இல்லாமல் கட்டுமானத் துறையில் எந்தவொரு தேசியப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள கூடியவர்கள் முப்படையினர் என்று தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன் "புதிய இராணுவத் தலைமையகத்தை நிர்மாணிப்பது உட்பட அவர்களின் செயல்திறன் சிறந்த தரம் வாய்ந்தது, தனித்துவமானது மற்றும் உயர்தரமானதுடன் ஏனென்றால் அவை மற்ற பங்குதாரர்களைப் போலல்லாமல் ஊழலிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்புள்ள இராணுவ வீரர்களாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளீர்கள், எங்கள் தேசத்தின் இதயங்களை வென்றுள்ளீர்கள். இந்த விஷயத்திலும் நிரூபிக்கப்பட்டதைப் போல, தைரியத்துடனும் உற்சாகத்துடனும் எந்த இலக்கையும் அடைய உங்களுக்கு முடியும் இந்த புதிய இராணுவ தலைமையகத்தைத் திறப்பது அரசாங்கத்திற்கு மாதத்திற்கு ரூ .42 மில்லியனை மிச்சப்படுத்த முடியும், மேலும் இந்த புதிய வசதி உங்கள் அனைவருக்கும் இணையற்ற புதிய வசதி உங்களின் ஒப்பிடமுடியாத தியாகங்களுக்கு உங்களுக்கு அஞ்சலி செலுத்தும் ”என்று ஜனாதிபதி அவர்கள் தனது விரிவுரையில் மேலும் கருத்து தெரிவித்தார். latest Nike release | THE SNEAKER BULLETIN