Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2019 22:05:27 Hours

இராணுவ உயிர் நீத்த படையினருக்கான பங்கர குருடு கீ எனும் புதிய நூல் வெளியீடு

புதிய வெளியீடான பங்கர குருடு கீ (பதுக்கு குழி போர் நூலானது) இன்று (18) மதியம் துன்முல்லை ஸ்ரீ சம்புத்தாவ ஜயந்தி கேட்போர் கூடத்தில் பாரிய அளவிலான முப்படையினர் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் மகா சங்க தேரர்களின் பங்கேற்றலுடன் இடம் பெற்றது.

மேலும் இவ் சிங்கள மொழியிலான நூலானது 30 வருட கால கொடிய யுத்தத்தின் போது படையினர் சேவையாற்றிய பதுக்கு குழி தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டதுடன் இப் போரானது 2009ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஊலகில் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான விசேட நூலாக இது அமைகின்றது. மேலும் இந் நிகழ்வில் வட மாகான ஆளுனரான கலாநிதி சுரேன் ராகவன் பாதுகாப்பு செயலாளரான (ஓய்வு) ஷாந்த கோட்டேகொட விமானப் படை தளபதியான எயார் மார்ஷல் கபில ஜயம்பதி இராணுவத் தளபதியை முன்னிலைப்படுத்தி இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் போன்ற பலரும் கலந்து கொண்;டனர்.

பங்கர குருடு கீ எனும் புதிய நூலானது காலம் சென்ற டென்சில் கொப்பேகடுவ அவர்களின் பாரியாரான திருமதி லலி கொப்பேகடுவ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதன் போது வட மாகான ஆளுனர் விமானப் படைத் தளபதி மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் போன்றோருக்கும் வழங்கப்பட்டது.

மேலும் 10வருட கால நிறைவு (தசாப்த கால) நிகழ்வை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந் நூலானது 18 மோ மாதம் இதற்கான நிகழ்வுகள் ஆரியா நிறுவனத்தின் அனுசரனையில் இந் நூல் எழுதுனரான சரித் கிரியல்ல அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.

அத்துடன் இந் நிகழ்வானது மகா சங்கத்தினரின் பங்களிப்புடன் திருமதி லாலி கொப்பேகடுவ மற்றும் சில உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக (பன் வடீம) பிராத்தனைகளுடன் இப் புத்தக வெளியீடு இடம் பெற்றது.Sports brands | Air Jordan