Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2022 22:15:13 Hours

இந்திய விவசாய வல்லுநர்கள் இராணுவத்தின் விவசாய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு

இரண்டு இந்திய நிபுணர்களான தமிழ்நாடு விவசாய வாரியத்தின் முன்னாள் பணிப்பாளர் திரு. ஏ. கோபால் ராஜ் மற்றும் மகரிஷி கல்வி அறக்கட்டளையின் நிர்வாக பணிப்பாளர் திரு டி கோடி செல்வம் ஆகியோர்களால் 'பசுமை விவசாயம் மற்றும் உயிரியல் வாயு பயன்பாடு' என்ற தலைப்பிலான விரிவுரை கடந்த திங்கட்கிழமை (28) நிகழ்த்தினர்.

இவ்விரிவுரையில் விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் 125 சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், காலாட் படைபிரிவுகள் மற்றும் பிரிகேட்களின் படையினர் சூம் தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்டனர்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல , மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல, விவசாயம் மற்றும் கால்நடைப் படையணி படைத் தளபதியும் நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர மற்றும் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷ் ராஜபக்ஷ, ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விரிவுரையின் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அந்த இந்திய நிபுணர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான அரிய வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் விவசாயத் துறை தொடர்பான அவர்களின் பிரச்சினைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

செயலமர்வின் இறுதியில் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்கள் இரு விரிவுரையாளர்களுக்கும் பாராட்டுச் சின்னங்களை வழங்கினார்.