6th May 2026
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 4 முதல் 5 வரை 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 11 வது (தொ) கஜபா படையணி ஆகியவற்றிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய, தளபதி இரு இடங்களிலும் வரவேற்கப்பட்டதுடன், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இவ் விஜயங்களின் போது அவர் மரக்கன்றுகளை நாட்டியதுடன் முகாம் வசதிகளை ஆய்வு செய்து படையினருக்கு உரையாற்றினார்.
தனது உரையில், இராணுவத்தின் வலிமைக்கும் மக்கள் நம்பிக்கைக்கும் ஒழுக்கம் அடிப்படையானது என்பதைத் தளபதி வலியுறுத்தினார். மேலும், எதிர்கால முன்னேற்றத்திற்கு அறிவு மேம்பாட்டின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்ததோடு, தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உரிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு படையினருக்கு அறிவுறுத்தினார்.
இவ்விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.