13th February 2024 18:00:36 Hours
8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் குமண பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கான புதிய வீட்டை நிர்மாணிக்கும் பணியை 05 பெப்ரவரி 2024 அன்று ஆரம்பித்தனர்.
8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஈடிஎஸ்கே தெனியாய அவர்கள் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை நாட்டினார். 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுவதுடன், அப்பகுதியின் அனுசரனையாளர்கள் குழுவினால் இத்திட்டத்திற்கான நிதியுதவி வழங்கப்படுகின்றது.