Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th February 2024 17:32:01 Hours

7 வது இலங்கை சமிக்ஞை படையணியின் 16வது ஆண்டு நிறைவு

7 வது இலங்கை சமிக்ஞை படையணி கட்டளை அதிகாரி மேஜர் எம்எஎஸ்எஸ் முதுகொட யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 7 வது இலங்கை சமிக்ஞை படையணியின் 16வது ஆண்டு நிறைவு மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் வியாழக்கிழமை (பெப்ரவரி 08) கொண்டாடப்பட்டது.

ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2024 ஜனவரி 27 முதல் 28 வரை படையினர்களுக்கு இடையில் கிரிக்கெட் மற்றும் கரப்பந்து போட்டிகள் நடைப்பெற்றதுடன், 2024 பெப்ரவரி 02 அன்று கும்பல்வெல மஹாமேவன தியான இல்லத்திற்கு படையினரால் தானம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மகா சங்க உறுப்பினர்களால் போதிபூஜை மற்றும் தர்ம சொற்பொழிவும் 04 பெப்ரவரி 2024 அன்று வழங்கப்பட்டது.

ஆண்டு நிறைவு நாளில், பிரதான நுழைவாயிலில் கட்டளை அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து அணிவகுப்பு மற்றும் அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர், 24 சிப்பாய்களுக்கும் 13 சிவில் ஊழியர்களுக்கும் அவர்களின் சேவையைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் அனைத்து நிலையினருக்குமான ஒன்றுகூடல் நிகழ்வும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த்து.