Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2018 21:00:51 Hours

69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு யாழில் விசேட மத பூஜை வழிப்பாடுகள்

69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு யாழ்ப் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் கடந்த (05) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இராணுவ கொடிகளை ஆசீர்வதிக்கும் வழிப்பாட்டு பூஜைகள் இடம் பெற்றன.

அத்துடன், யாழ் நாகவிகாரை, ஜூம்மா மசூதி, நல்லூர் இந்து கோவில் ஆசீர்வாதம் மற்றும் லேடி ஒப் அகதிகள் கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவற்றில் விசேட பூஜை வழிப்பாடுகள் இடம்பெற்றன.

இப் பூஜை நிகழ்வுகளில் யாழ்ப் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மற்றும் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு அரங்கின் கட்டளை தளபதி, 51 மற்றும் 52 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதிகள் 55 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி உட்பட் இராணுவ அதிகாரிகள், படையினர்களும் பங்கு பற்றினர். Asics footwear | nike fashion