16th December 2023 07:10:58 Hours
68 வது காலாட் படைப்பிரிவின் 14 வது ஆண்டு நிறைவினை 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சேனக கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கோம்பாவிலில் உள்ள படைப்பிரிவு தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (10 டிசம்பர் 2023) அன்று கொண்டாடினர்.
வெற்றியின் நினைவுத்தூபியில் போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதனை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.இராணுவ மரபுகளுக்கு இணங்க, வருகையின் போது நுழைவாயிலில் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்நது அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அன்றைய நிகழ்வானது அனைத்து நிலையினருடனான மதிய உணவோடு நிறைவடைந்ததுடன் அங்கு 68 வது காலாட் படைப்பிரிவு அதிகாரிகள் மற்றும் படையினருடன் தளபதி கலந்துரையாடினார்.