22nd December 2023 20:30:53 Hours
68 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சீ அவர்களுக்கு வெளிநாட்டில் வாழும் நன்கொடையாளர் வழங்கிய அனுசரணையுடன், 19 டிசம்பர் 2023 அன்று முல்லைத்தீவு தேவிபுரம் பாடசாலையில் கல்வி கற்கும் 134 மாணவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்காக காலணிகள் மற்றும் பாடசாலை புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகள் பங்குபற்றினர்.