26th April 2021 09:02:50 Hours
கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பிலான சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு மாநாடு செவ்வாய்க்கிழமை (20) வெலியோயாவிலுள்ள 62 வது படைப்பிரிவு தலைமையகத்தில் 62 வது படைப்பிரிவு தலைமையக தளபதி பிரிகேடியர் உபாலி குணசேகர தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் வெலியோயா பிரதேச செயலாளர் ,பதவிய உதவி பிரதேச செயலாளர், மஹாவெலி பிராந்திய திட்ட முகாமையாளர், அனைத்து பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள், வனஜீவசாரிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பதவிய வைத்தியசாலையின் சிரேஸ்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேற்படி பிரதிநிதிகள் தங்களது பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் - 19 தடுப்புக்கான செயற்பாடுகள் குறித்தும் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்தனர்.
பேரழிவு தடுப்பு திட்டங்கள், காடழிப்பு, நில பிரச்சினைகள் மற்றும் பிற சமூக விரோத பிரச்சினைகளை மட்டுப்படுத்தல் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன் இதன்போது பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் மற்றும் பதவி நிலை அதிகாரிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.