Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th March 2024 14:39:37 Hours

59 வது காலாட் படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில் மாஸ் ஹோல்டிங்ஸ் முல்லைத்தீவில் வேலை வாய்ப்பு

59 வது காலாட் படைப்பிரிவுடன் இணைந்து மாஸ் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு தொழில் வாய்பினை வழங்குவதற்கான நேர்காணலை 2024 மார்ச் 16 ஆம் திகதி நடாத்தியது.

மக்களுக்கு குறித்த நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த நேர்காணலில் 178 உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி டபிள்யூ.எம்.பீ.எம். விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 593 வது காலாட் பிரிகேட் தளபதி சோமவீர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.