19th February 2024 18:59:34 Hours
59 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.பி.எம். விஜேசூரிய ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வியாழன் (08 பெப்ரவரி 2024) 593 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் கட்டளைப் படையலகுகளுக்கு அண்மையில் விஜயம் செய்தார்.
இராணுவ சம்பிரதாயங்களைத் தொடர்ந்து வளாகத்திற்கு வருகை தந்த 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதியினை 593 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்.வி.ஏ. சோமவீர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் அன்புடன் வரவேற்றார்.
அதன்பின்னர், பிரிகேட் தளபதி மற்றும் கட்டளை அதிகாரிகள் அந்தந்தப் பகுதியின் பணிகள், வகிப்பங்குகள் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விளக்கமளித்தனர். இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.