Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th August 2018 14:32:14 Hours

59 ஆவது படைப் பிரிவில் சைபர் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு

இராணுவ தகவல் தொழில் நுட்ப பணியகத்தின் ஏற்பாட்டில் சைபர் பாதுகாப்பு பற்றிய அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், காரியாலயத்தில் மின்னணு தொடர்புகளைப் பயன்படுத்துவத்து தொடர்பாகவும், அதேபோல் சமூக ஊடகங்கள், முகநூல், சைபர் குற்றங்கள் தொடர்பான செயலமர்வு 59 ஆவது படைப் பிரிவில் (3) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது எண்ணக் கருவிற்கமைய 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இந்த பயிற்சி நிலையமானது சைபர் பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் இன்றைய விவகாரங்களில் கையாள்வதில் மிக உயர்ந்த நிலை இரகசியத்தை பராமரிப்பதற்கான வாய்ப்புகளை மையமாகக் கொண்டுள்ளது.

இந்த செயலமர்வில் விரிவுரைகள் 12 ஆவது சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி கேர்ணல் எஸ்.பி.பி பக்‌ஷவீர அவர்களினால் நிகழ்த்தப்பட்டன. இந்த செயலமர்வில் 235 இராணுவத்தினர் பங்கேற்றுக் கொண்டனர். Running sport media | UK Trainer News & Releases