Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2020 17:54:28 Hours

57 வது படைப் பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பச்சை வீட்டுத் திட்டம்’

இராணுவத் தளபதியின் 'துரு மிதுரு நவ ரத்தக்' மற்றும் தேசிய 'ஹுஸ்ம தென துரு' திட்டங்களுக்கு அமைவாக, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57 வது படைப் பிரிவின் படையினர், திங்கள்கிழமை 23 ஆம் திகதி அனைத்து படைப்பிரிவுகள் பட்டாலியன்கள் மற்றும் பயிற்சி பாடசாலைகளுக்கு 1500 க்கும் மேற்பட்ட உள்ளூர் தாவரங்களை விநியோகித்தனர்.

57 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம், 57 வது படைப் பிரிவு தலைமையகத்தின் கீழ் உள்ள அனைத்து முகாம்களுக்கும் இயற்கை மதிப்புகள் கொண்ட உள்ளூர் மரங்களை பாதுகாப்பதற்காக நடவு செய்ய 'ஈகோ பார்க்' அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டமானது 57 வது படைப் பிரிவு - முருக்கந்தி முகாம் வளாகத்தில் 2020 நவம்பர் 23 ஆம் திகதி 57 வது படைப் பிரிவின் படைத் தளபதியினால் ஆரம்பிக்கப்பட்டது. 57 வது படைப் பிரிவின் கேணல் பொது பதவி நிலை அதிகாரி, கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி மற்றும் 9 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். குறித்த விநியோகிக்கப்பட்ட அந்த மரங்களில் மோரா, பலா ,மருதை மற்றும் இலுப்பை போன்றவை அடங்கும் Asics footwear | nike air force 1 shadow , eBay