Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2023 19:10:27 Hours

563 வது காலாட் பிரிகேடினரால் தென்னம் பிள்ளைகள் வழங்கல்

வன்னி மற்றும் வடக்கில் நடைபெற்று வரும் தென்னைச் செய்கை திட்டத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 563 வது காலாட் பிரிகேட் படையினர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) வவுனியா, நெடுங்கேணி, மரத்தோடை பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மேலும் 500 தென்னை பிள்ளைகளை வழங்கினர்.

11 வது இலங்கை கெமுனு ஹேவா படையணி படையினர் தென்னை பயிர்ச்செய்கை சபையினால் வழங்கப்பட்ட தென்னம் பிள்ளைகளை பயனாளிகளுக்கு வடக்கில் ‘இரண்டாம் தெங்கு முக்கோணத்தை’ அமைப்பதனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அவற்றை விநியோகித்தனர். இத்திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டதினை தொடர்ந்து வன்னி வரை செயற்பட்டு வருகின்றது.