19th February 2024 13:43:40 Hours
மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் 2024 பெப்ரவரி 14 அன்று வவுனியா, கொகெலியாவில் உள்ள 56 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.
56 வது காலாட் படைப்பிரிவு தலைமையக பணிநிலை அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன் புதிய காலாட் படைப்பிரிவின் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அதன் பின், 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதனைத் தொடர்ந்து, அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கும் உரையாற்றிய அவர், 56 வது காலாட் படைப்பிரிவின் வளர்ச்சிக்கான தனது எதிர்கால திட்டங்களை முன்வைத்தார்.
காலாட் படைப்பிரிவின் பிரதித் தளபதி, அனைத்து பிரிகேட் தளபதிகள், 56 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொதுப் பணி, கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி, 56 வது காலாட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.