Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd January 2024 19:55:16 Hours

552 வது காலாட் பிரிகேடின் 17 வது ஆண்டு நிறைவு

552 வது காலாட் பிரிகேட் அதன் 17 வது ஆண்டு நிறைவு விழாவை 17 ஜனவரி 2024 அன்று பூநகரின் தலைமையக வளாகத்தில் 552 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎஸ்எஸ் ரதலகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத அனுசரிப்புகள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.

இந்நாளின் முக்கியத்துவத்தை மேலும் நினைவுகூரும் வகையில், அனுசரைனையாளர்களின் உதவியுடன் பிரிகேடின் கீழ் கடமையாற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களின் 62 பிள்ளைகளுக்கு பாடசாலை பைகள் பரிசாக வழங்கப்பட்டன.