Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th December 2021 14:22:19 Hours

542 வது பிரிகேடினரால் சமூகத்தினருக்கு மருத்துவ உதவிகள்

மன்னாரிலுள்ள 542 ஆவது பிரிகேட் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மடு வீதியிலுள்ள போதிராஜா விகாரையில் 'Success' அமைப்பின் தலைவி வைத்தியர் அனுலா விஜேசுந்தர அவர்களின் தலைமையில் நடமாடும் வைத்திய சேவை முகாமொன்று சனிக்கிழமை (04) ஆரம்பிக்கப்பட்டது.

தொலைதூரங்களில் அமைந்துள்ள விகும்புர மற்றும் மாத்ரகமம் கிராமங்களில் வசிக்கும் அறுபது கிராம மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்கான ஆலோசனைகள் இந்த நிகழ்வின் போது வழங்கப்பட்டன. இதன்போது 15 நபர்களுக்கு மூக்கு கண்ணாடிகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி சமூக மேம்பாட்டுத் திட்டமானது, 15 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் சிப்பாய்கள் மற்றும் 542 வது பிரிகேட் தளபதி டபிள்யூ.எஸ் பெர்ணான்டோ ஆகியோரினால் ஏற்பாடுசெய்யப்பட்டதோடு, 15 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் இரண்டாம் நிலை கட்டளை அதிகாரி, வைத்தியர்கள் குழு, தாதியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டதோடு இந்நிகழ்வு வைத்திய நிபுணர் அனுலா விஜேசுந்தர அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.