Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th November 2022 21:45:37 Hours

541 வது பிரிகேட் படையினரால் முன்னாள் விடுதலைப் புலிப் பெண் போராளிக்கு சமையலறை நிர்மாணிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54 வது காலாட் படைப்பிரிவின் 541 வது காலாட் பிரிகேட் பகுதியில் அமைந்துள்ள 12 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி படையினர் தமது மனிதாபிமான செயற்பாடுகளை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் மன்னார், முண்டம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் அங்கவீனமுற்ற முன்னாள் பெண் விடுதலைப் புலி போராளி ஒருவருக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய சமையலறை கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) அவரிடம் கையளிக்கப்பட்டது.

அப்பெண்ணின் வறுமை நிலையை அறிந்ததும் 12 வது (தொ) இலங்கை பீரங்கிப் படையணியின் படையினர் இணைந்து அவர்களின் தொழில்நுட்ப அறிவு , மனித வளம் மற்றும் அவர்களின் நிதி பங்களிப்புடன் இந்த சமையலறையின் நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நாட்டைப் பிரிக்கும் விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் முன்னாள் எல்.டி.டி.ஈ. உறுப்பினரான திருமதி.ராஜகன் மேரி ஜூட் ராஜி காயமடைந்தார், அதன் பின்னர் அவர் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக நிதி பிரச்சினையால் கஸ்டமான வாழ்க்கை நடத்துகின்றார்.

541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் தசந்த முனசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் 12 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஏ.ஏ.எஸ். அமரதுங்க அவர்களின் மேற்பார்வையின் படையினரின் பங்களிப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் தசந்த முனசிங்க அவர்களுடன் இணைந்து சில சிரேஷ்ட அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சில உலர் உணவுப் பொதிகளும் பயனாளியிடம் அதேநேரம் கையளிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் வசிக்கும் முன்னாள் புலிப் போராளியான திரு சேவியர் ஆண்டனி சில்வெஸ்டர் அவர்களுக்கும் உலர் உணவுப் பொதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.