Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2021 11:15:07 Hours

541 ஆவது பிரிகேட்டின் புதிய தளபதி கடமைளை பொறுப்பேற்றார்

541 ஆவது பிரிகேடின் 7 ஆவது தளபதியாக கேணல் லக்ஸ்மன் சமரதிவாகர புதன்கிழமை (20) பதவியேற்றுக் கொண்டார்.

இதன்போது பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் புதிய தளபதியை 12 ஆவது இலங்கை பீரங்கி படையின் கட்டளைத் அதிகாரி வரவேற்றார்.

பின்னர் கேணல் லக்ஸ்மன் சமரதிவாகர மத அனுட்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதுடன் தலைமையக வளாகத்தில் மரக் கன்று ஒன்றை நாட்டி வைத்த பின்னர் படையினருக்கு உரை நிகழ்த்தினார். அத்தோடு அனைத்து நிலைகளுக்குமான தேனீர் விரிந்திலும் கலந்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் பிரிகேட்டின் கட்டளையின் கீழுள்ள கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் என பலரும் கலந்துகொண்டு புதிய தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். Adidas footwear | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp