Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th October 2024 14:43:41 Hours

53 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்கிரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் 53 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 53 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் 14 ஒக்டோபர் 2024 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

53 வது காலாட் படைப்பிரிவின் புதிய படைப்பிரிவு தளபதி பணிநிலை அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அவர் புதிய அலுவலகத்தில் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் மத ஆசிர் வாதங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். பின்னர், புதிய வளாகத்தில் மரக்கன்று நடும் முன் குழு படம் எடுத்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைய, அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரை நிகழ்த்திய அவர், படைப்பிரிவின் எதிர்காலத்திற்கான தனது திட்டங்களை வெளிப்படுத்தினார். அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துடன் நிகழ்வு நிறைவுற்றது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.